Retro : பிரம்மாண்ட ஓப்பனிங்.. சூர்யாவின் ரெட்ரோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
Retro 1Day Tamil Nadu collection : கோலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியது. 2025, மே 1ம் தேதியில் வெளியான இந்த படமானது முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் பெற்றது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹைப் கொடுத்துவரும் படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தில் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியின் இந்த படமானது அருமையாக அமைத்திருக்கிறது என்றே கூறலாம். மாறுபட்ட கதைக்களத்துடன் கூடிய இந்த படத்தைப் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இந்த ரெட்ரோ படமும் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. சூர்யாவின் பல தோல்வி படங்களைத் தொடர்ந்து அவரின் கம்பேக் படமாக இந்த ரெட்ரோ படமானது அமைந்துள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொன்னதுபோல இந்த படம் காதல் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்த படமாக அமைந்துள்ளது.
ரத்தம், சண்டை மற்றும் காதல் என அருமையாக இந்தப் படம் இருக்கிறது. நேற்று 2025, மே 1ம் தேதியில் வெளியான இந்த படமானது முதல் நாளில் தமிழகத்தில் மற்றும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இந்த படமானது முதல் நாளில் சுமார் ரூ. 17.75 கோடிகளைத் தமிழகத்தில் மட்டும் சிறப்பாக வசூல் செய்துள்ளது. மேலும் இந்தி, தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் இந்த படமானது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Humbled and overwhelmed by your unconditional love ❤
Grab your tickets to #Retro 🎫
🔗 https://t.co/zLoKNZJF7N #RetroInCinemasNow #LoveLaughterWar https://t.co/jrIdtPg8l7— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 2, 2025
சூர்யாவின் இந்த படத்தின் காட்சிகள் எவ்வளவு அருமையாக அமைந்துள்ளதோ, அதைப்போல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி திரையரங்கத்தையே அதிரவைத்தது என்றே கூறலாம். நடிகை பூஜா ஹெக்டே இதுவரை நடித்திருந்த 2 படங்களை ஒப்பிடும்போது, இந்த ரெட்ரோ படத்தில் அவரின் பங்கு அதிகமாக இருக்கிறது. சொல்லப்போனால் நடிகை பூஜா ஹெக்டேவை வைத்து இந்த படத்தில் அடுத்தடுத்த காட்சிகள் நகர்கிறது என்றே கூறலாம்.
இந்த படமானது கங்குவா படத்தை ஒப்பிடும்போது படத்தில் எந்தவித தொய்வும் இல்லாமல், ஆடியன்ஸை அடுத்தடுத்த காட்சிகளின் மீது ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா எதிர்பாராத ஒரு ரோலில் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் இதில் நடிகர் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் , நாசர் மற்றும் விது இவர்களின் கதாபாத்திரம் நின்று விளையாடியது. சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த கதைகளுடன் இந்த படமானது மிகவும் அருமையாக அமைந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் இந்த ரெட்ரோ படத்தினுடன் நடிகர்கள் சசிகுமார் மற்றும் நானியின் திரைப்படங்களும் வெளியாகியது. தமிழகத்தைப் பொறுத்தவரை ரெட்ரோ படமானது அதிக வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் நானியின் ஹிட் 3 படமும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று இதுவரை சுமார் ரூ. 43 கோடிகளைக் கடந்து வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் தமிழகத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.