Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கைதி 2 கன்ஃபார்ம்… ஆனால் ரோலக்ஸ் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து தென்னிந்திய பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

கைதி 2 கன்ஃபார்ம்… ஆனால் ரோலக்ஸ் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 May 2025 12:43 PM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) தற்போது கூலி படத்தை இயக்கி வரும் நிலையில் கைதி 2 படம் குறித்தும் ரோலக்ஸ் படம் குறித்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அப்டேட் கொடுத்துள்ளார். 2016-ம் ஆண்டு அவியல் என்ற ஆந்தாலஜி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் நடிகர்கள் சந்தீப் கிஷன், ஸ்ரீ மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக 2019-ம் ஆண்டு வெளியான கைதி படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்தார்.

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ்:

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் முதல் பாகமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் அர்ஜுன் தாஸ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமானவர். ஒரு வில்லன் நடிகர் இவ்வளவு பெண் ரசிகைகளைப் பெருவார் என்பது இந்தப் படத்தில் தான் தெரிந்தது. இதில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸின் குரலுக்காகவே பெண் ரசிகைகள் அதிகரித்தனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஜெரேமியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ் மற்றும் கௌரி ஜி. கிஷன் என பலர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கமல் ஹாசனின் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை 2022-ம் ஆண்டு இயக்கியிருந்தார். இது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸின் இரண்டாவது பாகம் ஆகும். இந்தப் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு நடிகர் விஜய் வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை த்ரிஷா விஜய்க்கு நாயகியாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸின் மூன்றாவது பாகம் ஆகும்.

கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படத்தின் அப்டேட்:

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் அவர் பேசியதாவது, சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் படம் எப்போது வரும் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எனக்கும் கமிட்மெண்ட் இருக்கிறது.

நடிகர் சூர்யாவிற்கும் கமிட்மெண்ட் இருக்கிறது. அடுத்ததாக உடனடியாக நடிகர் கார்த்தியின் நடிப்பில் கைதி 2 உருவாக இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக ரோலக்ஸ் படம் பண்ணிதான் ஆகனும் என்றும் தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ்.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...