Aishwarya Lekshmi : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துட்டு போறதுக்கு மனசே வராது- ஐஸ்வர்யா லட்சுமி!
Aishwarya Lekshmi Visited The Meenakshi Amman Temple : தென்னிந்திய நடிகைகளில் ஒருவராகக் கலக்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் படமானது வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று 2025, மே 18ம் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெட்பிளிக்ஸ் புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி
கோலிவுட் சினிமாவில் நடிகர் விஷாலின் ஆக்ஷ்ன் (Action) படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi). இந்த படத்தில் அவர் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) என்ற படத்தில் தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக நடித்து ஹீரோயோனியாக தமிழில் அறிமுகமானார். இவர் இந்த படங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின் பாலி, பிருத்திவிராஜ் சுகுமாரன் மற்றும் காளிதாஸ் உடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான படம் மாமன் (Maaman). இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இன்று 2025, மே 18ம் தேதியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. சுவாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
அதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, எனக்கு மதுரை ஊர் மிகவும் பிடிக்கும், நான் எனது புதிய படங்களின் ஷூட்டிங்கிற்கு முன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன் மதுரை எனக்கு மிகவும் பிடிக்கும், இந்த ஊரை விட்டுச் செல்வதற்குக் மனசே வரவில்லை என்று பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து தான் நடிக்கும் புதிய படம் குறித்தும் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி புதிய படத்தைப் பற்றி பேச்சு :
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நான் தற்போது புதியதாக நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடிக்கவுள்ளேன், அதன் ஷூட்டிங் வரும் 2025ம் மே 21ம் தேதியில் தொடங்குகிறது. மேலும் எனக்குத் தமிழ் சினிமாவில் நிறையப் படங்களுக்காக வாய்ப்புகள் நிறைய இருந்து வருகிறது, அதன் காரணமாக வேறு மொழிகளில் நடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். மேலும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் பார்த்தேன், அதில் நானும் நடித்திருக்கிறேன். அந்த படமானது ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெரும் என்று கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் இன்ஸ்டாகிராம் பதிவு :
மாமன் படத்தைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இவர் தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினியாக கமிட்டாகிவருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்திலும் , ஹீரோயினியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்தான அறிவிப்புகளும் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.