Rajinikanth – Dhanush : ரஜினிகாந்த் – தனுஷ் படங்களில் ஒற்றுமை.. ஒரே பெயரில் நடித்துள்ளார்களா?

Dhanush And Rajinikanths Characters Are Similar : தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர்களாக இருந்து வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ். ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள்ளது. அதே போல நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் குபேரா. இந்த இரு படங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் நடிகர் தனுஷும் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஒரே கதாபாத்திரத்தின் பெயரில் நடித்திருக்கிறார்கள்.

Rajinikanth - Dhanush : ரஜினிகாந்த் - தனுஷ் படங்களில் ஒற்றுமை.. ஒரே பெயரில் நடித்துள்ளார்களா?

ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்

Published: 

15 May 2025 22:30 PM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் கூலி (Coolie). இந்த படத்தைக் கோலிவுட் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது முட்டிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. ரஜினிகாந்தின் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பல பான் இந்திய பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா (Deva) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்,  குபேரா (Kuberaa) படத்தில் நடிகர் தனுஷும் (Dhanush) தேவா (Deva) என்ற ரோலில் நடித்திருக்கிறார்.

தற்போது இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒரே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என, இருவரின் ஒற்றுமையைப் பற்றி ரசிகர்கள் பேசி வருகின்றனர். நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் திரைப்படங்களில் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரம் குறித்தான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது என்று நமக்குத் தெரியும், அதைத் தொடர்ந்து நடிகர் தனுஷும் குபேரா படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் தனுஷ் சினிமாவில் நுழைந்து 23 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த தகவலானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

நடிகர் தனுஷின் குபேரா படத்தினை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. குபேரா படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூன் மாதத்தில் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.