தக் லைஃப் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Thug Life Movie Censor Update: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக்லைஃப். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் சென்சார் குறித்த தகவலும் படத்தின் நீளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்... ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப்

Published: 

20 May 2025 07:42 AM

நடிகர்கள் கமல் ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், சான்யா மல்கோத்ரா, வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து முன்னதாக ஜிங்குச்சா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக சுகர் பேபி என்ற பாடலை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் கடந்த 17-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நடிகர் கமல் ஹாசனின் முத்தக் காட்சியும் ரொமான்ஸ் காட்சிகளுமே அதிகமா பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தின் சென்சார் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு சென்சார் போர்ட் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

மேலும் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 2 மணி நேரம் 45 நிமிடம் 42 வினாடிகள் ஓடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள இந்த மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் கூட்டணியில் உருவான இந்தப் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரில் காட்டியது என்ன?

தக் லைஃப் படத்தின் டெர்ய்லர் வெளியான போது ரங்கராய சக்திவேல் மற்றும் அவரது சகோதரர் மாணிக்கம் தலைமையிலான ஒரு பெரிய மாஃபியாவின் கதையுடன் தொடங்குகிறது. ஒரு எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில், ரங்கராய சக்திவேலை அமர் என்ற சிறுவன் காப்பாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து அமரை தனது மகனாக வளர்க்கத் தொடங்குகிறார் ரங்கராய சக்திவேல். பல வருடங்களுக்குப் பிறகு, ரங்கராய சக்திவேல் ஒரு கொலை முயற்சியில் சிக்கி இறந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த கொலை முயற்சிக்குப் பின்னால் அமரின் சதித்திட்டம் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

என்ன நடந்தது நிஜமாகவே ரங்கராய சக்திவேலுக்கு வளர்ப்பு மகனான அமர் துரோகம் செய்தாரா இல்லையா என்பது படம் வெளியானபிறகே தெரியவரும்.