Thalapathy Vijay : ‘ஜன நாயகன்’ படத்தின் விஜய்யின் பெயர் இதுவா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!

Jana Nayagan Movie Update : ஜன நாயகன் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக நடித்து வருபவர் விஜய். இவரின் இறுதி படமான இதை இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இவர்களின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதியாக நடித்து வரும் நிலையில், அவரின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay : ஜன நாயகன் படத்தின் விஜய்யின் பெயர் இதுவா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு!

ஜன நாயகன்

Published: 

06 May 2025 15:36 PM

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் அன்புடன் தளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது தனது 69வது படமான ஜன நாயகனில் (Jana Nayagan) முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படமானது நடிகர் தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் பிரம்மாண்ட பட்ஜெட்டிலும், அரசியல் கதைக்களத்துடனும் இந்த படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தை அஜித்தின் துணிவு படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கி வருகிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகிவரும் இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் இந்த படத்தில் மக்களுக்கு நேர்மையான வழியைக் காட்டும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஜன நாயகன் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய்யின் பெயரானது “தளபதி வெற்றிகொண்டான்” (Thalapathy Vettri Kondan)  என்று கூறப்படுகிறது.

இதில் என்ன சுவாரஸ்யம் என்று நினைத்தால், இந்த பெயரை ஆங்கிலத்தில் சுருக்கி அழைக்கும்போது “TVK” என்று தெரிகிறது. நடிகர் விஜய்யின் உண்மையான அரசியல் கட்சியின் பெயரை இந்த படத்திலும் அவரின் பெயருக்குப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது இந்த தகவலானது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களைக் குஷி படுத்தி வருகிறது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் விஜய்யின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படத்திலும் அவர் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இவர் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர்கள் நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார், பாபி தியோல் , மமிதா பைஜூ, ஸ்ருதி ஹாசன், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் கடைசிப் படம் என்பதால் பல பிரபலங்களும் கேமியோ ரோலில் நடிக்க உள்ளத்தைகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அணைந்தது சிறப்பாகத் தயாராகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த 2025 மே மாதத்தில் முழுமையாக நிறைவடையவுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.