விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு… புது ரிலீஸ் தேதி இதுதான்!

Actor Vijay Deverakonda: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த படம் கிங்டம். இந்தப் படம் முன்னதாக மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸை ஒத்திவைத்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் ரிலீஸை ஒத்திவைத்த படக்குழு... புது ரிலீஸ் தேதி இதுதான்!

கிங்டம்

Updated On: 

10 Jun 2025 20:53 PM

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் (Actor Vijay Deverakonda) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் படமான கிங்டம் படத்தை முன்னதாக மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்த படக்குழு படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி கிங்டம் படம் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிங்டம் படத்தின் வெளியீடு தள்ளிப்போவது இது முதல் முறை அல்ல. முன்னதாக மார்ச் மாதம் 28 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை திரில்லர் படமான இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா நாயகனாகவு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் சத்யதேவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, அன்பான ரசிகரக்ளுக்கு, நாங்கள் உங்களிடம் ஒரு தகவலை சொல்ல விரும்புகிறோம். அதன்படி கிங்டம் படம் வருகின்ற மே மாதம் 30-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று கூறியிருந்தோம். அந்த தேதியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி படம் வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நாட்டில் நடக்கும் அசாதாரண சூழல் காரணமாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளையும், விழாக்களையும் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் படத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட படங்களின் லிஸ்ட்:

சமீபத்தில் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஜய் தேவரகொண்டா தனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் பட்டியலை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதில் ஒரு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெவித்துள்ளனர். அப்படி அவர்கள் இந்தப் படத்தில் இணைந்தால் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.