வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் சூரி சொன்ன விசயம்

Actor Soori: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் மாமன். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்தப் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் சூரி சொன்ன விசயம்

நடிகர் சூரி

Published: 

20 May 2025 17:26 PM

இயக்குநர் பிரசாந்த் பாண்டியன் இயக்கத்தில் நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மாமன். கடந்த 16-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படங்களில் சூரியின் மாமன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கோலிவுட் சினிமாவில் சின்ன சின்ன பெயரிடபடாத கதாப்பாத்திரத்தில் நடித்து தொடர்ந்து காமெடியனாக முன்னேறினார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த சூரி தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். சூரி நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்தில் இருந்து தொடர்ந்து சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது மாமன் படத்தின் மூலம் தனக்கு பிடித்த ஜாலியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பீர்களா?

இந்த நிலையில் நடிகர் சூரி சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது சூரியிடம் நீங்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த நடிகர் சூரி நல்ல கதைக்களமாக இருந்தால் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிப்பேன் என்றும் இதுவரை வில்லன் கதாப்பாத்திரத்திற்கு எந்த கதையும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காமெடியன் டூ கதாநாயகன்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக அறிமுகம் ஆகும் நபர்கள் நாயகர்களாக நடிப்பது இந்த காலக்கட்டத்தில் தான். முன்பு எல்லாம் தமிழ் சினிமாவில் காமெடி அல்லது வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனால் அவர்கள் இறுதிவரை அதே கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க முடியும்.

ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர்கள் சிலர் நாயகர்களாவும் மாறியுள்ளனர். அதன்படி காமெடியனாக கலக்கிவ் அந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் தான் சூரியை தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் சூரியின் எக்ஸ் தள பதிவு:

விடுதலைப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி கொட்டுக்காளி, கருடன், விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சூரி நடிப்பில் மாமன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரிக்கு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.