எகிறும் விமர்சனங்கள்.. சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!

Tamizharasan Pachamuthu : சினிமாவில் தான் இயக்கிய முதல் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஈர்த்தவர் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. நடிகர் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தை இயக்கினார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனைப் பற்றிய அவதூறு விஷயங்கள் பரவி வரும் நிலையில், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆதரவு தெரிவித்து எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

எகிறும் விமர்சனங்கள்.. சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்த லப்பர் பந்து இயக்குநர்!

லப்பர் பந்து படக்குழுவுடன் சிவகார்த்திகேயன்

Published: 

20 May 2025 16:55 PM

கோலிவுட்டில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்ற திரைப்படம் லப்பர் பந்து (Lubber Pandhu). இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் (Harish Kalyan and Attakathi Dinesh) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu). இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது எதிர்பார்க்காத வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. மேலும் இந்த படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தைப் பார்த்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பாராட்டினார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan) படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

இந்நிலையில் சமீப காலமாக சிவகார்த்திகேயன் மீது பெரும் விமர்சனங்கள் எழுத்து வருகிறது. குறிப்பாக அவர் அறிமுக இயக்குநர்கள், மற்றும் சிறியபட்ஜெட் படங்களின் படக்குழுவை அழைத்துப் பாராட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலக் காப்பி செய்கிறாரா என்று இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து அதற்குப் பதிலளிக்கும் விதமாக லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மீதான விமர்சனங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணத்தில் எழுதியுள்ளார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இந்த பதிவில் இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து, “எங்களைப் போல அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, அதை முன்னணி பிரபலங்கள் பார்த்துவிட்டு அந்த படத்தினை பற்றி பெருமையாகப் பேசி , ட்விட்டர் பக்கத்தில் பதிடுவது அல்லது அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவது மிகவும் பெரிய விஷயம். அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது, எங்களைப் போல உள்ள புது முக இயக்குநர்களுக்கும் மட்டும்தான் புரியும்.

அதைப்போல சிவகார்த்திகேயன் சாருக்கு ரொம்ப  நன்றி, நாங்கள் படம் பார்க்க முழுமையாகப் பார்த்து, உங்களின் ஆதரவைப் படத்திற்குக் கொடுத்தற்கு மிக்க நன்றி.  மேலும் என்னைப் போல் உள்ள அறிமுக இயக்குநர்கள் சார்பாகவும் நன்றி என்று இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியுள்ளார். இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தைரியமாக தனது பதிலை பகிர்ந்துகொண்ட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.