Ace : விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா? சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் இதோ!
Ace Movie Update : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விடுதலை பார்ட் 2 படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள படம் ஏஸ். இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025ம், மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.

விஜய் சேதுபதியின் ஏஸ்
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஏஸ் (Ace). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்துதான் இந்த ஏஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் காட்சிகள் முழுக்க மலேசியா போன்ற வெளி நாடுகளில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் விடுதலை 2 (Vetrimaaran). இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஏஸ் படமானது வெளியாகவுள்ளது. இந்த ஏஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இவர் பிரபலமான கன்னட நடிகையாவார்.
நகைச்சுவை, ஆக்சன் மற்றும் அதிரடி கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2025, மே 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்சார் குழு இந்த படத்திற்கு யு ஏ தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த படமானது சுமார் 2 மணி நேரமும், 36 நிமிடங்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Gear up to witness a UA Certified Galatta of Action, Love, Fun and Mass Moments ❤🔥
Watch The Trailer ▶️ https://t.co/3l5XigFKey#ACETrailer #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat… pic.twitter.com/WNx7c7Sxjz
— VijaySethupathi (@VijaySethuOffl) May 20, 2025
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதையானது விஜய் சேதுபதி, ருக்மிணி வசந்த் மற்றும் யோகி பாபுவை சுற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் அதிரடி காமெடி காட்சிகளும், ஆக்ஷ்ன் கட்சிகளும் அதிகம் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஏஸ் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் மட்டும் சுமார் 5 படங்களுக்கும் மேல் உருவாகிவருகிறது. மேலும் இவர் தமிழ் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு படத்திலும் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக் காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.