நாடகம் போடுபவர்களுக்கே இது காலம்… மீண்டும் அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி

Aarti Ravi: தமிழ் சினிமாவில் தொடந்து சினிமா தொடர்பான செய்திகள் அதிகமாக இடம் பெறுகிறதோ இல்லையோ நடிகர் நடிகைகளின் சொந்த வாழக்கையில் நடக்கும் விசயங்களை சமீப காலமாக அதிகமாக இடம் பிடித்து வருகின்றது. அதில் முக்கியமான ஒன்று நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் பிரிவு தொடர்பான செய்திகள்.

நாடகம் போடுபவர்களுக்கே இது காலம்... மீண்டும் அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி

ஆர்த்தி ரவி

Published: 

20 May 2025 14:59 PM

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தனது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்ததில் இருந்து கணவனும் மனைவியும் மாறிமாறி குற்றம் சாட்டி வருகின்றனர். பிரிவை அறிவித்த போது இருவரும் தங்களுக்கான அறிக்கைகளை வெளியிட்டோதோடு இருந்த நிலையில் சமீபத்தில் ரவி மோகன் தனது தோழி கெனிஷா உடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான போது ஆர்த்தி ரவி அதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகனும் தனது தரப்பு விளக்கத்தையும் தான் திருமண வாழ்க்கையில் சந்தித்த துயரங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியிருந்தார். இதற்கு இடையில் ஆர்த்தி ரவியின் அம்மாவும் தயாரிப்பாளருமான சுஜாதாவும் தனது தரப்பு விளக்கம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இப்படி அறிக்கை மேல் அறிக்கையாக குடும்பத்தில் உள்ளவர்கள் மாறிமாறி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில் ஆர்த்தி ரவி தனது கணவர் தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்து விளக்கம் அளித்துளளார். குறிப்பாக கண்ணியமாக இருப்பவர்களை விட நாடகம் போடுவபர்களுக்கே இங்கு அதிக இடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்ததாக கூறிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்து பேசியிருந்தார். திருமணத்திற்கு பிறகு ரவி மோகன் தனது பெற்றோர்களை பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதகாம பேசிய ஆர்த்தி ரவி எங்களது சமூக வலைதள பக்கங்களைப் பார்த்தால் நாங்கள் குடும்பத்துடன் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம் என்று தெரியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பண ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மனநலம் ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக ரவி மோகன் தெரிவித்திருந்த நிலையில், ஒரு மனைவி தனது கணவரை அனைத்து தீய பழக்கங்களில் இருந்தும் காப்பாற்ற நினைத்து செய்த செயல் தவறு என்றால் நான் செய்தது தவறாகத்தான் தெரியும். அப்படி திருமண வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டப்பட்ட அவர் ஏன் ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளை கொண்டாடினார் என்றும் ஆர்த்தி ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டா பதிவு:

தொடர்ந்து தனது மகன்களுக்கு ஏற்பட்ட ஒரு சிறு விப்பத்தின் போது ரவி மோகனை பார்க்கவிடவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். அந்த விபத்து ஏற்பட்ட போது அவர் இந்தியாவிலேயே இல்லை. மேலும் அவர் எப்போது குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அவரை தடுக்க யாரும் இங்கு இல்லை. ஆனால் அவர் ஒரு வருடங்களில் 4 அல்லது 5 முறைதான் குழந்தைகளை பார்த்துள்ளார். அதுவும் அவர் விருப்பத்தின் பேரில்தான் என்றும் ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களது குடும்ப வாழ்க்கை பிரிய காரணம் எங்களுக்கு இடையே இருந்த பிரச்னை இல்லை. மூன்றாவதாக ஒருவர் எங்களது வாழ்க்கைக்குள் நுழைந்ததே காரணம் என்று கெனிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார் ஆர்த்தி ரவி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.