SJ Suryah: ‘இந்தியன் 2’ படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
SJ Suryah Shared About Acting In Indian 2 : தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே சூர்யா. இவர் சமீபகாலமாகப் படங்களை இயக்காமல் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் இந்தியன் 2 படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியுள்ளார். மேலும் கமல் ஹாசன் பற்றி அவர் சொன்ன விஷயத்தை முழுமையாகப் பார்க்கலாம்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா
சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் எஸ். ஜே. சூர்யா (SJ. Suryah) . இவர் அதை தொடர்ந்து படங்களில் உதவி இயக்குநராகவும், முக்கிய ரோல்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதை தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் வாலி (Vaalee) என்ற படத்தை இயக்கியதன் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். படங்களை இயங்கிவந்த இவர் தனது நடிப்பின் மூலமாகவும் மிகவும் பிரபலமான ஒருவரானார். ஆரம்பத்தில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் , தற்போது படங்களில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2) . விக்ரமின் இந்த படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தார்.
மேலும் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் நடிகர் எஸ். ஜே. சூர்யா இந்தியன் 2 படத்தில் நடித்துக் குறித்தும், கமலுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார். அதில் அவர் கமலுடன் நடிக்கும்போது மிகவும் பயங்கரமாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். மேலும் இந்தியன் 2 படமானது ஒரே பாகமாகத்தான் வெளியாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார். இதைப் பற்றி அவர் கூறியதை விவரமாகப் பார்க்கலாம்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசிய விஷயம் :
அதாவது “இந்தியன் 2 படம் சில காரணங்களால் 2 பாகமாக வெளியாகியிருந்தது. இந்த இந்தியன் பாகம் 2ல் எனக்கும் கமல் சாருக்கு இடையேயான காட்சி குறைந்த நேரம் மட்டுமே இருந்தது. ஆனால் பாகம் 2 வந்தால் அதில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலான காட்சிகள் இருக்கும். ஒரு வேலை இந்தியன் 3 வெளியானால் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா பேசிய வீடியோ :
Question: How was the working experience with #Shankar sir in #Indian2 ?#SJSurya: It was a great experience for me, but the movie was originally planned as one part and ended up being released in two parts.pic.twitter.com/Zky4YN5GRi
— Movie Tamil (@MovieTamil4) May 9, 2025
எஸ். ஜே. சூர்யாவின் புதிய படங்கள் :
நடிகர் எஸ். ஜே. சூர்யா கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தில் லீட் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கும் கார்த்திக்கும் இடையேயான மோதல்கள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இந்த படங்களைத் தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா தானே படத்தின் இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். அந்த படத்திற்கு அவர் கில்லர் என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.