டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்திய சிவகார்த்திகேயன்

Tourist Family: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமான பராசக்தியில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கு இடையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் அழைத்த்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்திய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் உடன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு

Updated On: 

11 May 2025 06:43 AM

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevind) இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார் (Sasikukar) மற்றும் சிம்ரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகை மாபெரும் வெற்றிப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் என பல தரப்பினரையும் பாராட்ட வைத்துள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெட்டு, குத்து, கொலை, ரத்தம் தெரிக்க தெரிக்க திரையரங்குகளில் படங்கள் வெளியாகி வந்த நிலையில் மக்களை ஆசுவாசம் செய்ய வந்தப் படம் போல் இருந்தது டூரிஸ்ட் ஃபேமிலி. ஃபீல் குட் என்று கூறப்படும் மனதிற்கு எந்தவித அழுத்தமுக் கொடுக்காமல் படம் முழுக்க மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் செல்லக்கூடிய படங்கள் மலையாள சினிமாவில் தான் வரும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தமிழில் வெளியான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி.

தமிழ் சினிமாவில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி என இரண்டு படங்கள் வெளியானது. இதில் முதலில் நடிகர் சூர்யாவின் படத்திற்கு கூட்டம் அதிகமாக சென்றாலும் பிறகு டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் தன்மையை மக்கள் பேச தொடங்கியபிறகு இந்தப் படத்திற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

குறிப்பாக திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவதாக அறிவிக்கும் அளவிற்கு இந்தப் படத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்தது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இழங்கையில் இருந்து ஒரு குடும்பம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு குடிபெயர்கிறார்கள். அதன்பிறகு அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மிகவும் அற்புதமாக எழுதி இயக்கியதுடன் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஆவேசம் படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், யோகி பாபு, பக்ஸ் என பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை லவ்வர் மற்றும் குட்நைட் என்று வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.