Tourist Family : சசிகுமார் – சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் டிரெய்லர்!
Tourist Family Trailer : அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ் பேமிலி. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் சிம்ரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரனின் (Sasikumar and Simran) முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சசிகுமாரின் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் இலங்கைத் தமிழர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதைக்களமானது இலங்கையில் இருந்து அகதிகளாகப் படகில் வந்த, சிம்ரன் மற்றும் சசிகுமார் , தமிழ் நாட்டில் எவ்வாறு தங்களின் குடும்பத்தை நடத்துகின்றனர் என்பதுதான் கதையாகும். இந்த படத்தில் இவர்களுடன் நடிகர் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், ரவி மரியா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது வரும் 2025, மே 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில்தான் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.