அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் – நடிகர் மாதவன் ஓபன் டாக்

Actor Madhavan: இந்திய சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குபவர் மாதவன். 90ஸ் முதல் 2கே கிட்ஸ்கள் உட்பட தற்போது வரை தனக்கான ரசிகைகளின் பட்டாளத்தை வைத்துள்ள ஒரே நடிகர் மாதவன் என்று கூறலாம். ரசிகர்கள் இவரை செல்லமாக மேடி என்றும் அழைக்கின்றனர்.

அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன் ஓபன் டாக்

நடிகர் மாதவன்

Published: 

04 May 2025 20:58 PM

தமிழ் சினிமாவில் 2000-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் மாதவன் (Actor Madhavan). தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். குறிப்பாக ரசிகைகளின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நடிகர் மாதவன். இந்தப் படத்தில் நடிகை ஷாலினி இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஆரம்பித்த இவர்களின் நட்பு தற்போது 25 வருடங்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. அதற்கு சான்று அடிக்கடி இவர்கள் இருவரும் சந்திக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் மாதவன் தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது நாயகனாக மட்டும் இன்றி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார் நடிகர் மாதவன்.

அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்த, மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், அன்பே சிவம், நல தமயந்தி, பிரியமான தோழி, ஜே ஜே, ஆயுத எழுத்து, யாவரும் நலம், மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மாறா என அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் ஏன் படங்களின் அடுத்தடுத்த பாகங்களில் நடிப்பது இல்லை என்பது குறித்து மாதவன் வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி மிட் டே செய்திக்கு தான் அளித்தப் பேட்டியில் பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் கலாச்சாரமான பார்ட் 2 மற்றும் பார்ட் 3 என்பது போன்ற படங்களை தவிர்ப்பது ஏன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் மாதவனின் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

அதில், தான் ஒரு படத்தில் செய்த கதாப்பாத்திரத்தை மீண்டும் மீண்டும் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், வெற்றியடைந்த ஒரு படத்தை அடுத்த அடுத்த பாகங்களாக எடுப்பதை விட புது கதையை மக்களுக்கு சொல்வதே சிறந்தது என்று தான் நினைப்பதாக நடிகர் மாதவன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டெஸ்ட். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிகர்கள் நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், தீபா என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இந்த டெஸ்ட் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியது.

Related Stories