Kavin : அனிருத் குரலில்… கவினின் கிஸ் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

Kiss Movie First Single : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருந்து வருபவர் கவின். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதை தொடர்ந்து ஹீரோவாக படங்களில் மாஸ் கட்டி வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் கிஸ். இந்தப் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் குரலில் திருடி என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Kavin : அனிருத் குரலில்... கவினின் கிஸ் படத்தின் முதல் சிங்கிள் வெளியானது!

கிஸ் திரைப்படம்

Published: 

30 Apr 2025 17:39 PM

தமிழில் சீரியல் நடிகராக அறிமுகமாகி, தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின்  (Kavin). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பிளடி பெக்கர் (Bloody beggar). இந்த திரைப்படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar)  இயக்கியிருந்தார். மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.  அந்த படத்தைத் தொடர்ந்து கவினின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிஸ் (Kiss). கவினின் இந்த படத்தை நடன இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் (Sathish Krishnan) இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலமாகத்தான் அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முற்றிலும் காதல் மற்றும் நடனக் கலையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களமானது உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கவினின் இந்த படத்தின் டீசர் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. திருடி என்ற பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாடியுள்ளார். தற்போது இந்த படத்தின் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவின் ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர் மேலும் தமிழில் அயோத்தி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து கவினுக்கு ஜோடியாகத் தமிழில் நடித்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள், கடந்த 2024ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து ஷூட்டிங் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்து வந்தது.

அதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 2025, ஜனவரி மாதத்தின் இறுதியில் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானியுடன், இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் படங்களைப் இயக்குவதைத் தொடர்ந்து, பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படமானது வரும் 2025, ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இவர் கவினின் டாடா, பிளடி பெக்கர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்த கிஸ் படத்திலும் இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது. திருடி என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். மேலும் சமீபத்தில் கவின் வெளியிட்ட பதிவில் அனிருத் எனது படத்தில் பாடவேண்டும் என்பது எனது 10 வருட கனவு என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.