த்ரிஷாவின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இதோ!

Watch To Watch: தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. இந்த நிலையில் இன்று நடிகை த்ரிஷா தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

த்ரிஷாவின் நடிப்பில் வெளியான பெஸ்ட் படங்களின் லிஸ்ட் இதோ!

த்ரிஷா

Updated On: 

04 May 2025 13:07 PM

மௌனம் பேசியதே: இயக்குநர் அமீர் (Director Ameer) இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மௌனம் பேசியதே. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். இதில் நாயகியாக நடிகை த்ரிஷா (Trisha) அறிமுகம் ஆகியிருந்தார். முன்னதாக ஜோடி படத்தில் நடிகை த்ரிஷா நடிகை சிம்ரனின் தோழியாக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். அந்த காட்சி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அவர் நாயகியாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையெ நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே நடிகை த்ரிஷாவை ரசிகர்கள் கொண்டாடினர். இந்தப் படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் நடிகை த்ரிஷா. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சாமி: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் சாமி. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். படத்தில் கியூட்டான பெண்ணாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

கில்லி: இயக்குநர் தரணி இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்திருந்தார். இதில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். படத்தில் கபடி வீரராக இருக்கும் விஜய் எதிர்பாராத விதமாக நடிகை த்ரிஷாவின் பிரச்னையை கையில் எடுத்து அதிலிருந்து அவரை காப்பற்ற முடிவு செய்கிறார். இதனைத் தொடர்ந்து விஜய் அந்த சிக்கல்களை எப்படி தீர்த்தார் என்பதே  படத்தின் கதை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அபியும் நானும்: இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான படம் அபியும் நானும். இதில் பிரகாஷ் ராஜ் தந்தையாகவும் நடிகை த்ரிஷா மகளாகவும் நடித்திருந்தனர். மேலும் அப்பா மகள் பாசத்தை மிகவும் அழகாக காட்டிய இந்தப் படம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.