PPF Scheme : மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால்!

Senior Citizen Public Provident Fund Investment | பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

PPF Scheme : மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்.. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால்!

மாதிரி புகைப்படம்

Published: 

10 May 2025 15:31 PM

பொருளாதாரம் (Economy) என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. காரணம் மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, உடை உள்ளிட்டவற்றை பெற பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளும் பொருளாதாரத்தை மையப்படுத்தியே உள்ளது. எனவே, தங்களது அன்றாட தேவைகளுக்காகவும், பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும் நிலையான பொருளாதாரத்தை பெற பொதுமக்கள் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் பொருளாதார சிக்கல்கள்

சாதாரன குடிமக்களுக்கே நிதி சார்ந்த பல பிரச்னைகள் உருவாகும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு சொல்லவா வேண்டும். பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) நிச்சயம் நிதி சிக்கல்கள் ஏற்படும். ஆனால், அவற்றை சமாளிக்க அவர்களிடம் போதிய பொருளாதாரம் இருக்காது. இத்தகைய சவாலான சூழல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தான் எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெற உதவும் அசத்தலான திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம் – எப்படி?

பொதுமக்களுக்கு பயனளிக்கும் பல வகையான சேமிப்பு திட்டங்களை அரசு அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் PPF ( Public Provident Fund) எனப்படும் பொது வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் தங்களது கடைசி காலத்தில் சிறந்த பலன்களை பெறலாம். பலரும் கடைசி காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் பெரும் வகையில் முதலீடு செய்வர். அத்தகைய ஒரு திட்டம் தான் இந்த பொது வைப்பு நிதி. இந்த பொது வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.40,000 வரை வருமானம் பெறலாம்.

முதலீடு செய்வது எப்படி?

ஒருவர் தனது 25 வயது முதலே இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு இதன் மூலம் 56 வயதுக்கு மேல் மாதம் மாதம் ரூ.39,163 வட்டியாக பெற முடியும். இதுவே ஆண்டுக்கு ரூ.4,69,961 வட்டியாக பெற முடியும். இந்த திட்டத்தில் மாதம் ஊதியம் பெறுவது மட்டுமன்றி ரூ.93,00,000 ஓய்வூதிய கார்பஸையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.