Cibil Score : சிபில் ஸ்கோரில் வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Important Rules Changed in Cibil Score | இந்தியாவை பொருத்தவரை பொதுமக்கள் வங்கிகள் மூலம் கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கு சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு சிபில் ஸ்கோர் மிகவும் முக்கியமாக உள்ள நிலையில், அதில் வந்துள்ள சில முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Cibil Score : சிபில் ஸ்கோரில் வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

10 May 2025 16:30 PM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டால் பலரும் கடன் வாங்க முடிவு செய்கின்றனர். அவ்வாறு கடன் வாங்க விரும்பும் பொதுமக்கள் வங்கிகளை நாடுகின்றனர். அவ்வாறு வங்கிகளில் கடன் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் வங்கி விதிகளை பூர்த்தி செய்வது, ஆவணங்களை சமர்பிப்பது உள்ளிட்டவை உள்ளன. இந்த நடைமுறைகளுக்கு பிறகே கடன் வழங்கப்படும்.

வங்கி கடன் வாங்க முக்கிய பங்கு வகிக்கும் சிபில் ஸ்கோர்

அவ்வாறு வங்கிகள் கடன் பெறுவதற்காக ஒரு முக்கிய அம்சம் தான் சிபில் ஸ்கோர் (Cibil Score). பொதுமக்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்கு முன்னதாக அவர்களின் சிபில் ஸ்கோர் எந்த நிலையில் உள்ளது என்பதை தான் வங்கிகள் சோதிக்கும். சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான புள்ளி மதிப்பெண்கள். இந்த மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும்போது கடன் கிடைப்பதற்கான அதிகம் வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த மதிப்பெண் குறைவாக இருக்கும்போது கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளன.

சிபில் ஸ்கோரில் வந்த முக்கிய மாற்றங்கள் – என்ன என்ன?

  • சிபில்  ஸ்கோர் காரணமாக தனிநபர் கடன், வீட்டு கடன் அல்லது வாகன கடன் ஏதேனும் நிராகரிக்கப்பட்டாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதற்கான காரணத்தை வங்கிகள் விண்ணப்பதாரரிடம் முறையாக தெரிவிக்க வேண்டும்.
  • கடனுக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டால் அதில் செய்யப்பட்டுள்ள தவறுகளை விண்ணப்பதாரர்கள் சரிசெய்துக்கொள்ள 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்.
  • வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது சிபில் ஸ்கோரை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஆட்டோமெட்டிக் ரிஜெக்‌ஷன் (Automatic Rejection) செய்யப்படும் நடைமுறை இனி இருக்காது என கூறப்பட்டுள்ளது. மாறாக மனித மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • சிபில் தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை அப்டேட் செய்யப்பட்டு வரும் நிலையில், இனி அடிக்கடி அப்டேட் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

பொதுமக்கள் வங்கிகளில் வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதை அடிப்படையாக் கொண்டு இந்த சிபில் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. அதாவது, கடனை முறையாக செலுத்தி வந்தால் சிபில் ஸ்கோரில் எந்த வித மாற்றமும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். இதுவே கடன் செலுத்துவதில் தாமதம் அல்லது சிக்கல் இருந்தால் இந்த புள்ளி மதிப்பெண்கள் குறையும். இதனை வைத்தே ஒருவர் கடனை முறையாக திருப்பி செலுத்துவாரா இல்லையா என்பதை வங்கிகள் தெரிந்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.