RBI : புதிய ரூ.20 நோட்டை அறிமுகம் செய்த ஆர்பிஐ.. பழைய நோட்டுக்கள் செல்லாதா?
Reserve Bank of India introduced new 20 rupees | இந்திய ரிசர் வங்கி இந்தியாவின் நிதி சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன, பழைய 20 ரூபாய் நோட்டு செல்லாதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோப்பு புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) இந்தியாவின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது, வங்கிகளுக்கு நடைமுறை விதிகளை வெளியிடுவது, புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ரூபாய் நோட்டை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த புதிய ரூபாய் நோட்டுக்களின் சிறப்பு அம்சங்கள் என்ன, பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார். அவர் ஆளுநராக பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாட் நோட்டுக்களை அறிமுகம் செய்துள்ளார்.
புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்த இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாட் நோட்டுக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது இந்த புதிய ரூபாய் நோட்டை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 20 ரூபாய் நோட்டுக்களில் முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸின் கையொப்பம் இடம்பெற்றிருக்கும் நிலையில், தற்போது புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பம் அடங்கிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாதா? – ஆர்பிஐ கூறுவது என்ன?
ஏற்கனவே 20 ரூபாட் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ள நிலையில், ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் காரணமாக பழைய நோட்டுக்கள் இனி செல்லாதா என பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரூபாய் நோட்டில் ஆளுநரின் கையெழுத்து மட்டுமன்றி வேறு எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் ஏற்கனவே புழகத்தில் உள்ள நோட்டுக்களை பொதுமக்கள் எந்தவித தடையும் இன்றி பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.