India – Pakistan Ceasefire : இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. 3.7% வரை குறைந்த தங்கம் விலை!

Gold Price Drops 3.7% After India - Pakistan Ceasefire | கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

India - Pakistan Ceasefire : இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. 3.7% வரை குறைந்த தங்கம் விலை!

மாதிரி புகைப்படம்

Published: 

13 May 2025 14:47 PM

இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே நிலவி வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தங்கம் விலை (Gold Price) 3.7 சதவீதம் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரூ.75,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு சவரன் தங்கம் தற்போது விலை குறைந்து ரூ.70,000 என்ற நிலையில் நீடித்து வருகிறது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் மட்டுமன்றி , உலக நாடுகளின் நடவடிக்கையும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை 3.7 சதவீதம் வரை குறைந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டு 30 சதவீதம் வரை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் ஏற்படும். அதன் காரணமாக ஒரு ஆண்டில் தங்கத்தின் விலையில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்பட்டு விலை உயர்வு அல்லது குறைய செய்யும். ஆனால், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை உயர்வை மட்டுமே அடைந்து வருகிறது. ஆனால், பொதுவாக சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் தங்கம் விலை, 2024-ல் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024-ல் தங்கம் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அதாவது ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை 2024-ல் சரசரவென உயர்ந்து ரூ.70,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2025-ல் மேலும் விலை உயர்வை அடைத்து ரூ.75,000 வரை தங்கம் விலை சென்றது.

இந்தியா – பாகிஸ்தான் பதற்றத்தால் உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.75,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் முடிவுக்கு வந்ததன் காரணமாக தற்போது ரூ.70,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.95,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.3,430 வரை குறைந்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் விவகாரம் முடிவுக்கு வந்தது மட்டுமன்றி, உலக நாடுகளின் நடவ்டிக்கையும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதாவது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின்  மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ளது. தங்கம் விலை குறைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.