ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம் – அப்படி என்ன திட்டம்?

Systematic Withdrawal Plan : ரூ.3.5 லட்சம் ஒரே முறை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அதைத் தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மாதம் ரூ.58,766 வருமானமாக பெறலாம். இது Systematic Withdrawal Plan (SWP) என்ற திட்டத்தின் மூலமாக சாத்தியமாகும்.

ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம் - அப்படி என்ன திட்டம்?

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 May 2025 19:06 PM

ஓய்வு பெற்ற பிறகு வாழ்வை நிம்மதியாக கழிக்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் எது சரியான திட்டம் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். மார்கெட்டில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் கிடைக்கின்றன. நமக்கு ஏற்ற திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். ஜி பிசினஸில் வெளியான கட்டுரையின் படி ஒரு சேமிப்பு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  அதன் படி ரூ.3.5 லட்சம் ஒரே முறை முதலீடு செய்தால், அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.58, 766 வரை வருமானம் பெறலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியம்? எளிமையான முறையில் பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாத வருமானம் பெறுவது எப்படி?

மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது பங்குகள், கமாடிட்டி, முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்யும் வகையைக் குறிக்கிறது. ஈக்விட்டி, ஹைபிரிட் மற்றும் டெப்ட் வகைகளில் கிடைக்கும் இவை, நீண்ட கால முதலீட்டுக்கே ஏற்றவை. இந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒருவர் பெரிய தொகை ஒன்றை ஒரே முறை முதலீடு செய்தால், அவரது ஓய்வு காலத்தில் மிகப்பெரிய தொகையாக மாறியிருக்கும். அதனை சிஸ்டமேட்டிக் வித்டிரால் பிளான் (Systematic Withdrawal Plan) மூலம் மாத வருமானமாக பெறலாம்.

உதாரணமாக ஒருவர் ரூ.3,50,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொண்டால் ஆண்டு வருமான வரி விகிதம் 12 சதவிகிதமாக இருக்கும். அது போக சிஸ்ட்மேட்டிக் வித்டிரால் பிளானின் வட்டி விகிதம் 7 சதவிகிதமாக இருக்கும்.  அதன் படி நாம் செய்யும் முதலீடு 30 ஆண்டுகளில் ரூ.1,04,85,973 என்ற மிகப்பெரிய தொகையாக வளரும். அதிலிருந்து வருமானவரியை கழித்த பிறகு, சிஸ்டமேட்டிக் வித்டிரால் பிளான் மூலம்  பெறக்கூடிய தொகை ரூ.88,84,601.375 ஆக இருக்கும்.

வேலை இல்லாத நேரங்களில் கூட மாத வருமானம்

இந்த மொத்த தொகையில் 7 சதவிகித வருமான விகிதத்தில் மாதம் ரூ.58,766 வரை பெறலாம். இப்படி நாம் பெறும் தொகை 30 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.2,11,56,581 ஆகும். நாம் பெற்றது போக இருப்பு ரூ.821 இருக்கும். நீண்ட கால முதலீட்டு திட்டங்கள் உங்கள் எதிர்கால வாழ்க்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும். தற்போது பணம் கையிலிருக்கும்போதே, மியூச்சுவல் ஃபண்ட், SIP  உள்ளிட்ட திட்டங்ளில் முதலீடு செய்து, ஓய்வு பெற்ற பிறகு ஒரு நிலையான வருமானம் பெறலாம். பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து, வேலை இல்லாத நேரங்களில் கூட மாத வருமானம் பெற இது ஒரு புத்திசாலித்தனமான வழியாக பார்க்கப்படுகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)