EPFO : பிஎஃப் கணக்கில் தாமதமாக வட்டி வரவு வைக்கப்படுவது சிக்கலா?.. இபிஎஃப்ஓ கூறுவது என்ன?
Delayed Interest in Provident Fund Account | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு வைத்துள்ள ஊழியர்களின் பிஎஃப் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் தாமதமாக வழங்கப்படுவதால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் இந்தியாவில் உள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயன் பெற்று வருகின்றனர். கரணம் ஊழிய வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஊழியர்களின் மாத ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தும் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். அவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியருக்கு பணத்தை எடுக்க வேண்டிய தேவை வரவில்லை என்றால் அவர் தான் பணி ஓய்வு பெறும் வரை பங்களிப்பை செய்து கொண்டே வரலாம். பின்னர் ஓய்வு பெற்றதும் அந்த பணத்தை ஓய்வூதியமாக பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பிஎஃப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி
பிஎஃப் தொகையை எடுக்காமல் இருப்பது ஓய்வூதியம் பெற அனுமதி வழங்குவது மட்டுமன்றி, அதிக லாபத்தையும் பெற வழிவகை செய்கிறது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வரவு வைக்கப்படும் பணத்திற்கு வட்டி வழங்கப்படுகிறது. தற்போது பிஎஃப் தொகைக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள எந்த ஒரு சேமிப்பு திட்டங்களை விவவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்தில் உள்ள பணத்தை எடுக்காமல் நீண்ட நாட்கள் முதலீடு செய்வது வருவது சிறந்த பலன்களை வழங்கும்.
வட்டி தாமதமாக வரவு வைக்கப்படுவது சிக்கலா – இபிஎஃப்ஓ கூறுவது என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பிஎஃப் தொகைக்கு வழங்கப்படும் வட்டி முக்கியதுவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், தாமதமாக வட்டி வழங்கப்பட்டால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மார்ச் வரை வட்டியை கணக்கிடுகிறது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வரவு வைக்கப்படும் வட்டி ஜூன் மாதத்தில் கணக்கில் சேர்க்கப்படும். எனவே தாமதமாக வட்டி வழங்கப்பட்டாலும் முழு ஆண்டுக்குமான வட்டி தொகையும் கணக்கில் செலுத்தப்படும்.
உதாரணமாக பயனர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.2 லட்சம் இருக்கிறது என்றால் அந்த முழு தொகைக்கான ஒரு ஆண்டுக்கான வட்டி முழுவதுமாக வழங்கப்படும். எனவே பிஎஃப் தொகைக்கு தாமதமாக வழங்கப்படும் வட்டி குறித்து பயனர்கள் கவலைப்பட தேவையில்லை என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறுவது குறிப்பிடத்தக்கது.