Credit Score : ரூ.1 லட்சம் கடன் வாங்க எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Credit Score Criteria for Getting Loan | வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கிரெடிட் ஸ்கோரும் முக்கியம். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கி கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் ரூ.1 லட்சம் கடன் வாங்க எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

Credit Score : ரூ.1 லட்சம் கடன் வாங்க எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 May 2025 13:21 PM

மனிதர்களின் வாழ்வில் பொருளாதாரம் (Economy) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நிலையான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு நிலையான பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்ப்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிப்பதில் கடும் சிரமம் ஏற்படும். இந்த நிலையில், தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்ய பெரும்பாலான மக்கள் கடன் வாங்குகின்றனர். அவ்வாறு கடன் வாங்க நினைக்கும் நபர்கள் வங்கிகளை நாடுகின்றனர். வங்கிகள் கடன் வழங்குவதற்கு ஒரு சில விதிகளை பின்பற்றுகின்றன. அதில் முக்கியமானது தான் கிரெடிட் ஸ்கோர் (Credit Score). இந்த கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலே வங்கிகள் பொதுமக்களுக்கு கடன் வழங்குகின்றன.

வங்கிகளில் கடன் வாங்க கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது?

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு நபரின் கடன் விவரங்கள் மற்றும் செயல்பாடுகளை பொறுத்து வழங்கப்படும் புள்ளிகள் ஆகும். வங்கிகளில் கடன் பெற்று அவற்றை முறையாக திருப்பி செலுத்தி வந்தால் கிரெடிட் ஸ்கோர் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் அதிக மதிப்பெண்களை கொண்டிருக்கும். இதுவே, கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தவில்லை அல்லது முறையாக மாத தவணைகளை செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் குறையும். இதன் மூலம் அந்த நபர் முறையாக கடனை திருப்பி செலுத்துவாரா என்பதனை வங்கிகள் உறுதி செய்துக்கொள்ளும். இதனால் தான் வங்கிகளில் கடன் வாங்க கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக கருதப்படுகிறது.

ரூ.1 லட்சம் கடன் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்?

கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரை இருக்கும். இந்த நிலையில், 700-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அது சிறப்பானதாக கருதப்படுகிறது. அவ்வாறு 700-க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபர்களுக்கு வங்கிகள் சுலபமாக கடன் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ரூ.1 லட்சம் கடன் பெற வேண்டும் என்றால் அந்த நபரின் கிரெடிட் ஸ்கோர் 700-க்கும் மேல் இருக்க வேண்டும் என வங்கிகள் கூறுகின்றன. கடன் பெறுவதற்கு 700 புள்ளிகள் அடிப்படையாக கருதப்படும் நிலையில், ரூ.1 லட்சம் கடன் வாங்க விரும்பினாலும் கட்டாயம் கிரெடிட் ஸ்கோர் 700 ஆக இருக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வங்கிகளில் கடன் பெற வேண்டும் என நினைக்கும் நபர்கள் தங்களது கிரெடிட் ஸ்கோரை 700-க்கும் குறையாமல் பாதுகாக்க வேண்டும். சில வங்கிகள் கிரெடிட் ஸ்கோருக்கு விலக்கு அளித்து குறைவான புள்ளிகள் இருந்தாலும் கடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றுக்கு ஏற்றார்போல் வங்கிகளின் விதிகள் சற்று கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.