Gold Price : ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. உச்சத்தை தொட்டது!

Gold price hiked twice in a day in Chennai | சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில் கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று ( மே 06, 2025) ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை உயர்ந்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. உச்சத்தை தொட்டது!

தங்கம் விலை

Published: 

06 May 2025 17:09 PM

சென்னை, மே 06 : சென்னையில் இன்று (மே 06, 2025) தங்கம் விலை (Gold Price) ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. அதன்படி, காலையில் கிராமுக்கு ரூ.125 உயர்ந்த நிலையில், இரண்டாவது முறையாக ரூ.65 உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் ஒரு கிராம் ரூ.9,000-க்கு கீழும், ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 ஆகவும் நீடித்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை கிராம் ரூ.9,000-க்கு மேலும், ஒரு சவரன் ரூ.72,000-க்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை

  • 27 ஏப்ரல் 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.9,005-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 28 ஏப்ரல் 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,940-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 29 ஏப்ரல் 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,980-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 30 ஏப்ரல் 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,980-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 01 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,775-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 02 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,775-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 03 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,775-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 04 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,775-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 05 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.8,900-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 06 மே 2025 – ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.9,100-க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்துக்கொண்டே வந்த நிலையில், இன்று (மே 06, 2025) ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.9,025-க்கு ஒரு சவரன் ரூ.72,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிரம ரூ.9,100-க்கும், ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.