Aadhaar Card : ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
How to Update Aadhaar Card Details Online | இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு ஒரு மிக முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.

மாதிரி புகைப்படம்
இந்திய குடிமக்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India), ஆதார் கார்டுகளை (Aadhaar Card) வழங்கி வருகிறது. இந்த ஆதார் கார்டில் 12 இலக்க எண், ஒரு நபரின் பெயர், முகவரி, வயது, புகைப்படம், கைரேகை, கண் ரேகை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த தகவல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்து அடையாளம் கூறுகிறது. இந்த தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யும் வசதியையும் இந்திய தனித்துவ அடையாள அணைய வழங்குகிறது. இந்த நிலையில், ஆதாரில் உள்ள தகவல்களை இலவசமாக புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவல்களை புதுப்பிக்க கூறும் UIDAI
ஆதார் கார்டில் உள்ள முகவரி, வயது, புகைப்படம் ஆகியவை மாற்றத்திற்கு உரிய தகவல்களாக கருதப்படுகின்றன. உதாரணமாக ஒருவர் தனது பத்து வயதில் ஆதார் கார்டு எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து அவரது வயது, புகைப்படம் மாறி இருக்கும். இதே போல பணி சூழல், கல்வி ஆகிய காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. என் காரணமாக முகவரியும் மாறி இருக்கும். இந்த நிலையில், அதே தகவல்களை காலத்துக்கும் பயன்படுத்த முடியாது. எனவேதான் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனது அடையாள அணையும் கூறுகிறது.
ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பது எப்படி?
- அதற்கு முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான myaadhaar.uidai.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும்.
- இதற்கு பிறகு ஆதார் கார்டில் நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
- அதனை பயனபடுத்தி உள்நுழைய வேண்டும்.
- அதில் வலது பக்கத்தின் மேல் புறத்தில் Update Aadhaar என்ற ஆப்ஷன் தோன்றும்.
- அதனை கிளிக் செய்து நீங்கள் மாற்ற வேண்டிய தகவல்களை மாற்றலாம்.
- அதற்காக அடையாள சான்றாத மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதிவிடலாம்.
- பிறகு விவரங்களை சர்ப்பார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆதார் கார்டை அப்டேட் செய்யும் நிலையில், 10 முதல் 15 நாட்களுக்கு தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 14, 2025 வரை மட்டுமே இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.