Gold Price : ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Drops Nearly 1000 Rupees in Chennai | கடந்த சில நாட்களாக தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று ( மே 09, 2025) கிட்டத்தட்ட ரூ.1,000 வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 09 : சென்னையில் இன்று ( மே 09, 2025) தங்கம் விலை (Gold Price) சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.1,000 வரை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை திடீர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. நேற்றைய ( மே 08, 2025) நிலவரத்தின் படி தங்கம் விலை ரூ.73,0000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது, இன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.1,000 வரை குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே கடும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. அதாவது 2024 ஆம் ஆண்டு ரூ.65,000-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் தற்போது ரூ.70,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.70,000 வரை குறைந்த தங்கம் விலை மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்ததால் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டது. தற்போது தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனை செய்யப்படும் தங்கம்
- 30 ஏப்ரல், 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,980-க்கும், ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 01 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,775-க்கும், ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 02 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,775-க்கும், ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 03 மே , 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,775-க்கும், ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 04 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,775-க்கும், ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 05 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,900-க்கும், ஒரு சவரன் ரூ.71,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 06 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,100-க்கும், ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 07 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,075-க்கும், ஒரு சவரன் ரூ.72,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 08 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- 09 மே, 2025 – 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,015-க்கும், ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக 70,000-த்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று ( மே 09, 2025) மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று ( மே 08, 2025) ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.9,130-க்கும் ஒரு சவரன் ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ( மே 09, 2025) சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும் கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.