எல்லையை பாதுகாக்க புறப்பட்ட ராணுவ வீர்ரகள்.. மலர் தூவி வழியனுப்பிய பொதுமக்கள்.. வைரல் வீடியோ!
Civilians Shower Flowers on Soldiers Deployed to Border | ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தியாவை பாதுகாக்க நாடு முழுவதிலும் இருந்து ராணுவ வீரர்கள் எல்லைக்கு அழைக்கப்பட்டனர். அவ்வாறு எல்லைக்கு செல்ல புறப்பட்டப் ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி அனுப்பி வைத்தனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
உத்தர பிரதேசம், மே 11 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) எல்லை பாதுகாப்புக்கு சென்ற ராணுவ வீரர்களை பொதுமக்கள் மலர் தூவி வழி அனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்த நிலையில், நாடு முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஏராளமான ராணுவ வீரர்களை இந்தியா ராணுவம் எல்லைக்கு அழைத்தது. அந்த வகையில், எல்லைக்கு சென்ற ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்யும் வகையில் வழி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல் எதிரொலி – இந்தியா – பாகிஸ்தான் இடையே வெடித்த மோதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா கடும் கோபம் அடைந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இதன் காரணமாக பாகிஸ்தானும் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவியது.
ராணுவ வீரர்களை மலர் தூவி வழி அனுப்பி வைத்த பொதுமக்கள்
In Uttar Pradesh, soldiers stopped at a roadside dhaba for a meal locals welcomed them with flower showers and applause. 🔥🔥 pic.twitter.com/mNxZHnNUVo
— Mohit 🇮🇳 (@Mohit_ksr) May 10, 2025
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் இருந்து சில ராணுவ வீரர்கள் எல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக புறப்பட்டனர். அதற்கு முன்னதாக அவர்கள் அங்குள்ள உணவகத்தில் உணவு அருங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்த பொதுமக்கள் ராணுவ வீரர்கள் வெளியே வருவதற்காக வாசலில் காத்துக்கொண்டு இருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் வெளியே வந்ததும் அவர்கள் மலர் தூவி ராணுவ வீரர்களை வழியனுப்பி வைத்துள்ளனர். இதனை கண்ட ராணுவ வீர்ரகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தேசப்பற்றுடனும், நெகிழ்ச்சியுடனும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.