அரசு பேருந்தை நிறுத்தி திடீர் ட்ரிப் அடித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்…
Minister's Surprise Bus Ride:போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்தார். பொதுமக்களிடம் நேரில் பேசி சேவை குறைபாடுகளை அறிந்தார். ஓட்டுநர், நடத்துநர்களுடன் பணிச்சூழல் குறித்து விவாதித்தார். இந்த திடீர் பயணம், பேருந்து சேவையை நேரில் மதிப்பீடு செய்யவும், பொதுமக்களின் பிரச்சனைகளை அறியவும் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு விரைவு பேருந்தில் பயணம்
சென்னை மே 21: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், (Transport Minister S.S. Sivashankar) 2025 மே 20 ஆம் தேதி நேற்று சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து (Chennai Kalaignar Bus Stand, Glampakkam) அரசு விரைவு பேருந்தில் ஊர் திரும்பினார் (government express bus). பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களிடம் சேவையில் குறைபாடுகள் உள்ளதா என நேரில் கேட்டறிந்தார். பின்னர் ஓட்டுநரின் பின் இருக்கையில் அமர்ந்து சாதாரண பயணியாக பயணம் செய்தார். ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பணிச்சூழல், சேவை குறித்து விவரமாக பேசினார். சேவைகளின் தரத்தை நேரில் மதிப்பீடு செய்யவே இந்த பயணத்தை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த திடீர் பயணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எஸ். எஸ். சிவசங்கர் தமிழ்நாட்டின் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு விரைவு பேருந்தில் பயணம்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் 2025 மே 20 ஆம் தேதி நேற்று தனது அலுவல்களை முடித்த பின்னர், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஊர் திரும்பினார்.
பயணத்திற்கு முன், அந்த பேருந்தில் இருந்த பொதுமக்களிடம் சேவையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை நேரில் கேட்டறிந்தார். அதன் பிறகு, ஓட்டுநரின் இருக்கைக்கு பின் உள்ள இருக்கையில் அமர்ந்து, சாதாரண பயணியாக தனது பயணத்தை தொடர்ந்தார்.
ஓட்டுநர், நடத்துநர்களுடன் பணிச்சூழல் குறித்து விவாதித்தார். இந்த திடீர் பயணம், பேருந்து சேவையை நேரில் மதிப்பீடு செய்யவும், பொதுமக்களின் பிரச்சனைகளை அறியவும் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதாக்க பார்க்கப்படுகிறது.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு விரைவு பேருந்தில் பயணம்
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணம்! pic.twitter.com/cEGTMJ3xGO
— Sivasankar SS (@sivasankar1ss) May 20, 2025
பயணத்தின் போது, ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பேசினார்
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அரசு பேருந்தில் பயணத்தின் போது, ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பேசினார். அவர்களின் பணிச்சூழல், சேவைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
அமைச்சரின் இந்த திடீர் பயணம், போக்குவரத்துத் துறையின் சேவைகளை நேரில் புரிந்துகொள்வதற்கான முயற்சியாகவும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரில் அறிந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.