தஞ்சையில் பயங்கரம்.. அரசு பேருந்தும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 6 பேர் பலி!
Thanjavur Accident : தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், டெப்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை, மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur accident) செங்கிப்பட்டியில் நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், டெப்போவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 மே 21ஆம் தேதியான நேற்று இரவு 9 மணியளவில் கர்நாடகாவில் இருந்து தனியார் டெம்போ ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திருச்சி நோக்கிச் தமிழக அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அரசுப் பேருந்து செங்கிப்பட்டியில் உள்ள மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மற்றும் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அரசு பேருந்தும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து
பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், மேம்பாலத்தில் வாகனங்களை ஒற்றைப் பாதையில் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது, எதிரிதே வந்த டெம்போவும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த விபத்தில் பலரும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் அவ்வழியாக பயணித்தவர்கள் உடனே அம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு போலீசார், காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
6 பேர் உயிரிழந்த சோகம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
முன்னதாக, கரூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்தும், சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். செம்மடை அருகே அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து, சாலையின் சென்டர் மீடியனை தாண்டியதில் எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி, ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு இடங்களில் விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.