சாயக்கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!
Toxic Gas Kills 2 in Tiruppur | தமிழகத்தில் விஷவாயு மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று (மே 20, 2025) திருப்பூரில் இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சாயக்கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்த கொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாதிரி புகைப்படம்
திருப்பூர், மே 20 : திருப்பூரில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பலியான சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலையில் சாயக்கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்த கொண்டு இருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சாயக்கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஊழியர்கள் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் தொடரும் விஷவாயு மரணங்கள்
தமிழகத்தில் விஷவாயு மரணங்கள் மற்றும் மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைத்த பாடில்லை. அந்த வகையில் திருப்பூரில் இரண்டு ஊழியர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
விஷவாயு தாக்கி உயிரிழந்த ஊழியர்கள் – திருப்பூரில் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான சாய ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் நேற்று (மே 19, 2025) சுமார் ஏழு அடி நீளம் கொண்ட சாயக்கழிவு நீர்தொட்டியை ஆலையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் செய்து வந்துள்ளனர். அப்போது அவர்களை திடீரென விஷவாயு தாக்கியுள்ளது. இதில் நான்கு பேரும் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், மயக்கம் அடைந்த ஊழியர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாயக்கழிவு நீர்தொட்டியை சுத்தம் செய்த போது ஊழியர்கள் உயிரிழந்ததுன் எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.