கிண்டி பக்கம் போறீங்களா? நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!

Chennai Traffic Diversion : கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 2025 மே 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், சில நாட்கள் மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

கிண்டி பக்கம் போறீங்களா? நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!

சென்னை போக்குவரத்து மாற்றம்

Updated On: 

20 May 2025 10:01 AM

சென்னை, மே 20 : சென்னையில் கிண்டி பகுதியில் 2025 மே 21ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கு வகையில், கிண்டி பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் எப்போது போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றுக் கொண்டிருக்கும். தற்போது, மெட்ரோ பணிகள், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து உள்ளது. இதனால், சரியான நேரத்தில் மக்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பாக கிண்டி பகுதி சொல்லவே வேண்டாம்.

கிண்டி பக்கம் போறீங்களா?

கிண்டியில் மெட்ரோ ரயில் நிலையம், மின்சார ரயில் சேவை ஆகியவை இருப்பதால் எப்போது நெரிசலாகவே இருக்கும். வேலை நேரங்கள் மட்டுமில்லாமல், எப்போதுமே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிலில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை  போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கிண்டி பகுதியில் சோதனை அடிப்படையில், 2025 மே 21ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும், மேலும் நேராக மத்திய கைலாஷ் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை செயல்படுத்த மாநகர பேருந்துகள் தற்போதுள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

இதற்கிடையில், கிண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகிறது. பயணிகள் சிரமத்தை போக்க ரூ.20.75 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ரேஸ் கோர்ஸ் சந்திப்பில் ஏறினால் அண்ணா சாலையில் பயணிகள் இறங்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாலம் மெட்ரோ ரயில் பயணிகளும், மின்சார ரயில் பயணிகளுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மேம்பாலம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவில்லை. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக,  அனைத்து பகுதிகளில் மெட்ரோ  சேவை  கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மெட்ரோ சேவை அனைத்து பகுதிகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.