Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீலகிரி இ-பாஸ் சிக்கல்: வெகு நேரம் காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்

E-pass Control Lacks in Practice: ஊட்டி உள்ளிட்ட நீலகிரி பகுதிகளில் பண்டிகை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, இ-பாஸ் சோதனை காரணமாக 8 கிமீ வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இ-பாஸ் கட்டுப்பாடு அறிமுகமாகியுள்ள நிலையில், நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நீலகிரி இ-பாஸ் சிக்கல்: வெகு நேரம் காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரியில் போக்குவரத்து நெரிசல்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 19 Apr 2025 10:54 AM

நீலகிரி ஏப்ரல் 19: ஊட்டி (Ooty) மற்றும் சுற்றுப்பகுதிகளில் பண்டிகை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை மற்றும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனைகள் போக்குவரத்தை தடுக்கும் நிலையில், 8 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் நெரிசலில் காத்திருக்கின்றன. சென்னையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுலா வாகனங்களுக்கு 6,000-8,000 மட்டுமே அனுமதி (Only 6,000-8,000 allowed for tourist vehicles) அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், வணிகர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், இ-பாஸ் நடைமுறை குறைபாடுகள் பற்றிய பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காவல்துறையினருக்கான வசதிக்கு புதிய தடுப்புகள் மற்றும் நிழற்குடைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர் விடுமுறை: நீலகிரிக்கு குவியும் சுற்றுலாப்பயணிகள்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நீண்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் வருகை தந்தனர். இதன் காரணமாக, தமிழக-கேரள எல்லையான நாடுகாணியில் சோதனைச் சாவடிகளில் இ-பாஸ், வரி வசூல் மற்றும் பிளாஸ்டிக் பொருள் ஆய்வுகள் நடைபெற்று வந்ததால், போக்குவரத்து நெரிசல் பெரிதும் அதிகரித்தது. சுற்றுலா வாகனங்கள் சுமார் 8 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் இ-பாஸ் கட்டுப்பாடு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு 2024 மே 7ம் தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டாயமாக இ-பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உத்தரவின் மூலம் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் முயற்சியாக அமைகிறது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி

வார நாட்களில் தினமும் 6,000 வாகனங்கள் மற்றும் வார இறுதியில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இத்துடன், ஆம்புலன்ஸ், அவசர வாகனங்கள் மற்றும் நீலகிரி பதிவு கொண்ட வாகனங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெரிசலால் சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்

நாடுகாணி சோதனைச் சாவடியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகளால், வாகனங்களின் வரிசை மிகுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும், தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையிலும், ஊட்டி-குன்னூர், ஊட்டி-கோத்தகிரி, ஊட்டி-கூடலூர் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

இ-பாஸ் சோதனை குறைபாடுகள்?

ஊட்டிக்கு கடந்த நான்கு நாட்களில் 38,600க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெயில் மற்றும் விடுமுறை காலம் ஆகிய காரணங்களால் கூட்டம் அதிகரித்தது. இ-பாஸ் நடைமுறை எங்கு எங்கு சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதனால் குழந்தைகளுடன் வந்த சுற்றுலாப்பயணிகள் மணிக்கணக்கில் அவதிக்குள்ளாகினர்.

இ-பாஸ் நடைமுறையை எதிர்க்கும் வணிகர்கள்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இ-பாஸ் நடைமுறை காரணமாக வணிகத் துறை பாதிக்கப்படும் எனக் கூறி, வணிகர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் இ-பாஸ் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டிய மனுவை தாக்கல் செய்தது. நீதிமன்றம் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் கட்டாயம் என்றும், பேருந்து பயணிகளுக்கு விதிவிலக்கு என்றும் தெரிவித்தது.

காவல்துறைக்கு புதிய ஏற்பாடுகள்

ஊட்டி நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்காக, தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான 50 தடுப்புகள் மற்றும் 10 நிழற்குடைகள் வழங்கப்பட்டன. இவை முக்கிய சாலைகளில் பொலிஸாருக்காக அமைக்கப்பட்டு, வெயிலும் மழையிலும் பாதுகாப்பை வழங்கும் வகையில் உள்ளன. நீலகிரி மாவட்ட எஸ்பி நிஷா இதனை அறிமுகப்படுத்தியபோது, பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்...
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!...
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...