வெயிலுக்கு குட்பை… முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. வானிலை மையம் குளுகுளு தகவல்!
Southwest Monsoon 2025 : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை 2025 மே 13ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெயிலின் தாக்கம் பெரிதளவு இருக்காது என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை
சென்னை, மே 06 : தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon 2025) முன்கூட்டியே துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தென்மேற்கு பருவமழை 2025 மே 13ஆம் தேதி அந்தமான் பகுதிகளில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதம் இறுதியில் துவங்க இருக்கும் நிலையில், 2025ஆம் ஆண்டில் முன்கூட்டியே துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் வாட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசி வருகிறது. இதனால், கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை
இதற்கிடையில், அவ்வப்போது, மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள், டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்த தென்மேற்கு பருவமழை அனைத்து மாநிலங்களுக்கு மழை பொழிவை கொடுக்கும். அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை குமரிமுனை, கேரளா, தமிழ்நாடு என வட மாநிலங்கள் வரை மழை பொழிவு இருக்கும். கோடை காலத்தில் பிறகு தென்மேற்கு பருவமழை தொடங்குவதால் மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் பகுதிகளில் 2025 மே 13ஆம் தேதியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே இறுதியில் தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே 2025 மே 13ஆம் தேதி பருவமழை தொடங்குகிறது. அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான நிகோபார் தீவுகளில் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதாக கூறப்படுகிறது.
வானிலை மையம் குளுகுளு தகவல்
தமிழகத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விட 104 சதவீதம் வரை கூடுதல் மழைப் பொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் மே மாத இறுதிலேயே மழை பெய்து, வெப்பத்தை தணிக்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கினாலும், தமிழகத்தில் பொதுவாக தென்மேற்கு பருவமழை குறைவான மழை பொழிவை கொடுக்கும். தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தான் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.