சென்னை மக்களுக்கு குட் நியூஸ்… ஏசி மின்சார ரயில்களில் வரப்போகும் மாற்றம்!
Chennai AC EMU Train : சென்னையில் 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஏசி மின்சார ரயில்கள் பயணிகள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, ரயில் சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஏசி மின்சார ரயில்
சென்னை, மே 10: சென்னையில் ஏசி மின்சார ரயில் (Chennai AC Emu Train) சேவை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தான், பயணிகள் கோரிக்கை எடுத்து, ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் உள்ள போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிப்பது மின்சார ரயில் சேவை. மின்சார ரயில் சேவைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்
போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், விரைவாகவும் செல்வதால் பயணிகள் பெரிதும் மின்சார ரயிலிலேயே பயணித்து வருகின்றனர். மின்சார ரயில்கள் தற்போது சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – தாம்பரம் – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிமாக இருக்கும். புறநகரை இணைக்கக் கூடியது என்பதால் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை அடுத்து, பயணிகளின் கோரிக்கை தெற்கு ரயில்வே நிறைவேற்றியது. அதன்படி, சென்னை ஏசி மின்சார ரயில்கள் 2025 ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 8 சேவைகள் வரை ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஏசி மின்சார ரயில் வரப்போகும் மாற்றம்
ஞாயிற்று கிழமைகளை தவிர அனைத்து நாட்களில் ஏசி மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 6.30 மணி முதல் இரவு 8.50 மணி வரை ஏசி மின்சார ரயில் சேவை உள்ளது. ஞாயிற்று கிழமை தவிர தினமும் 8 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கோடை காலத்திற்கு பயணிகளுக்கு இந்த ரயில் பெரிதும் உதவுகிறது.
தற்போது, தினமும் சுமார் 2,500 பயணிகள் ஏசி மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வருகையில் ஏசி மின்சார ரயிலின் சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 2025ஆம் ஆண்டு 10 புதிய ஏசி மின்சார ரயில்களை தயாரிக்க தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில் ஒன்று சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பாதையில் கூடுதல் சேவையாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து தரப்பு மக்களும் ஏசி ரயிலில் பயணிக்க கூடிய வகையில், டிக்கெட் கட்டணத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஏசி மின்சார ரயிலுக்கான கட்டணம் ரூ.35 முதல் ரூ.105 வரை வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.