30 முறை மட்டுமே Use.. மீறினால் Case! குடிநீர் கேன் பயன்பாடு குறித்து எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை!
New Regulations for Drinking Water Cans: சென்னையில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் குடிநீர் கேன்கள் மற்றும் பாட்டில்களின் விற்பனையால் தரக் குறைபாடுகள் குறித்து FSSAI எச்சரிக்கை விடுத்துள்ளது. கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது, நிறம் மாறிய கேன்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கேன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சென்னை மே 06: கோடையில் கேன் (Water Cans) மற்றும் பாட்டில்களில் குடிநீர் (Drinking Water) விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தரக்குறைவுகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை (Food Safety Department) எச்சரிக்கை விடுத்துள்ளது. கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட வேண்டும், நிறம் மாறினால் மீண்டும் நிரப்பக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லிட்டர் குடிநீரில் கால்சியம் 10–75 மி.கி, மெக்னீசியம் 5–30 மி.கி ஆகிய அளவுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பலர் பாக்டீரியா கலப்பால் உடல்நல பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் தரமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். FSSAI, பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை ‘அதிக ஆபத்துள்ள உணவு’ என வகைப்படுத்தி, வருடாந்திர ஆய்வுகள் கட்டாயம் செய்துவருகிறது.
குடிநீர் கேன்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
கோடை வெயில் தீவிரம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் கேன் மற்றும் பாட்டில்களில் குடிநீர் விற்பனை பெரிதும் அதிகரித்துள்ள நிலையில், அதன் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. முறையான உரிமம் இல்லாமல் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேன்கள் மற்றும் பாட்டில்களில் தரக் கட்டுப்பாடுகள்
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், கேன் வாட்டரின் தரமானது நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 1 லிட்டர் குடிநீரில் கால்சியம் 10 முதல் 75 மில்லிகிராம் மற்றும் மெக்னீசியம் 5 முதல் 30 மில்லிகிராம் இருக்க வேண்டும். மேலும், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி தெளிவாக அச்சிடப்பட வேண்டும். கேன்கள் அதிகபட்சம் 30 முறை மட்டும் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும் என்பதும், அதன் நிறம் மாறினால் மீண்டும் நிரப்பி விற்பனை செய்யக்கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாக்டீரியா கலப்பால் மக்கள் பாதிப்பு – நெட்டிசனின் புகார்
இன்ஸ்டாகிராம் நெட்டிசன் ஒருவர் (senti.bee) வீட்டு பயன்பாட்டிற்காக வாங்கிய கேன் தண்ணீரில் பாக்டீரியா இருந்ததாக புகார் தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட சீர்கேடு காரணமாக அவர் பரிசோதனை செய்ததில், வீட்டில் பயன்படுத்திய கேன் தண்ணீரில் பாக்டீரியா மாசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது குடும்பத்தினர் மற்றும் சுற்றியுள்ளவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையற்ற தண்ணீர் உடல்நலக்கேடுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
FSSAI புதிய நடைமுறைகள் – வருடாந்திர ஆய்வுகள் கட்டாயம்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிறைவு ஆணையம் (FSSAI), பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டரை ‘அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்கள்’ என வகைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், இனிமேல் அனைத்து குடிநீர் நிறுவனங்களும் வருடாந்திர ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு கட்டாயமாக உட்பட்டிருக்க வேண்டும். புதிய உரிமம் பெறுவதற்கும், பாட்டில்களில் தண்ணீர் நிரப்ப அனுமதி பெறுவதற்கும் இவ்வாய்வுகள் முன்னிட்டு நடத்தப்பட வேண்டும்.
மக்கள் தாங்கள் பயன்படுத்தும் கேன் அல்லது பாட்டில் குடிநீர் தரமானதா என விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாக்டீரியா உள்ளிட்ட மாசுகளால் உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால், நிர்வாக துறையின் எச்சரிக்கைகளை கடைபிடித்து, சோதிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்துவது மிக முக்கியம்.