மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி? பகீர் பின்னணி!
Hosur Woman Murder : ஓசூரில் மனைவியை கொலை செய்ததாக ஜிம் மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கை, கால்களை கட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, மூக்கில் இருந்து ரத்து வந்து உயிரிழந்துவிட்டதாக கூறி, நாடமாடி இருப்பதாக பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான ஜிம் மாஸ்டர்
ஓசூர், மே 03 : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண்ணை கணவர் கொலை செய்து உயிரிழந்துவிட்டதாக கணவர் நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள கணவன், மனைவியின் மூக்கில் இருந்து ரத்தம் வந்து உயிரிழந்துவிட்டதாக கூறி நாடகமாடி இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். 34 வயதான இவர் ஜிம் மாஸ்டராக உள்ளார். இவர் மேலும் நான்கு ஜிம்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா (33). இவர் மாகடி சாலையில் விளையாட்டு பள்ளியை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் பழகி உள்ளனர். இந்த நட்பு பிறகு காதலாக மாறியுள்ளது.
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்
இதனை அடுத்து, இவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்டனர். திருமணத்திற்கு அவர் ஒசூரில் ஜீம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், சசிகலா தனது கணவருக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்படியே, ஜிம் மாஸ்டர் பாஸ்கருக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 30ஆம் தேதி சசிகலாவுடன் பாஸ்கருடன் இருந்துள்ளார். அப்போது, திடீரென சசிகலாவுக்கு மூக்கில் ரத்தம் வந்ததாக கூறி, அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த மரணம் குறித்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிக்கியது எப்படி?
அப்போது, அவரது கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சசிகலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சசிகலாவின் தந்தை அருள், பாஸ்கர் சசிகலாவை உடல் ரீதியாக தாக்கி, தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் கூறினர். பாஸ்கர் ரூ.14 லட்சம் வரதட்சணை வாங்கி தன்னுடன் தொடர்ந்து சண்டையிட்டதாகவும் அருள் கூறினார். இதனை அடுத்து, பாஸ்கரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, பாஸ்கர் மனைவியை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.
அதாவது, 2025 ஏப்ரல் 30ஆம் தேதி பாஸ்கரும், சசிகலாவும் மது அருந்தி உள்ளனர். பின்னர், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர், சசிகலாவை பாஸ்கர் கை, கால்களை கட்டிப்போட்டு, கழுத்தில் துணியை சுற்றி கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், மனைவி சகிகலாவின் மூக்கில் ரத்து வந்துவிட்டாக கூறி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.