ஊருங்குள் புகுந்த சிறுத்தை.. வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றதால் அதிர்ச்சி.. ஊட்டியில் பரபரப்பு!

Leopard Tries to Hunt Pet Dog | ஊட்டியில் வீட்டின் வெளியே கட்டி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஊருங்குள் புகுந்த சிறுத்தை.. வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றதால் அதிர்ச்சி.. ஊட்டியில் பரபரப்பு!

ஊருக்குள் நுழைந்த சிறுத்தை

Updated On: 

08 Jul 2025 23:34 PM

ஊட்டி, ஜூலை 08 : ஊட்டி (Ooty) பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், ஊருக்குள் வந்த சிறுத்தை (Leopard Entered Into Village) ஒன்று அங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சி செய்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஊட்டியில் உலா வரும் வன விலங்குகள்

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ள நிலையில் ஊட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானை சிறுத்தை கரடி புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உலா வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு ஊருக்குள் வரும் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட வன விலங்குகள் பொதுமக்களை தாக்குவது, செல்லப்பிராணிகளை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வீட்டிற்குள் புகுந்த வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை

இந்த நிலையில், ஊட்டி அடுத்த கெந்தொரை என்ற கிராமத்தில் வெள்ளை பூண்டு பயிரிடப்பட்ட தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மறைந்திருந்துள்ளது. அப்போது அந்த தோட்டத்தில் அருகே உள்ள வீட்டில் நாய் இருப்பதை சிறுத்தை கண்டுள்ளது. இந்த நிலையில், மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, நாயை வேட்டையாடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்துள்ளது. ஆனால், சிறுத்தையை பார்த்த நாய், குரைக்கவே வேட்டையாட முடியாமல் சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.