Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!

Young Guns of CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக இளம் வயதில் அறிமுகமாகி சாதனை படைத்த வீரர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை. ஆயுஷ் மத்ரே, அபினவ் முகுந்த், அங்கித் ராஜ்புத், மதிஷா பதிரனா மற்றும் நூர் அகமது போன்ற வீரர்களின் ஐபிஎல் அறிமுகம், வயது மற்றும் அவர்களின் பங்களிப்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த இளம் வீரர்களின் திறமை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பு ஆகியவை இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் வீரர்கள்

Updated On: 

21 Apr 2025 08:15 AM

ஐபிஎல் (IPL) வரலாறு என்று எடுக்கும்போது அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை என்றுமே தவிர்க்க முடியாது. அனுபவம் நிறைந்த அணியை கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) ஐபிஎல்லில் இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் ஏலம் என்று வந்தால் சென்னை நிர்வாகம் பெரும்பாலும் அனுபவம் நிறைந்த வீரர்களை எடுத்து, அதை கொண்டு எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை சிந்திக்கும். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல இளம் வீரர்களும் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இளம் வயதில் அறிமுகமாகி அசத்திய வீரர்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆயுஷ் மத்ரே:

ஐபிஎல் 2025ன் 38வது போட்டியில் 2025 ஏப்ரல் 20ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான இளைய வீரர் என்ற பெருமையை ஆயுஷ் மத்ரே பெற்றுள்ளார். ஆயுஷ் மத்ரேவுக்கு தற்போது 17 வயது 278 நாட்களே ஆகியுள்ளது.

அபினவ் முகுந்த்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான 2வது இளைய வீரர் என்ற சாதனையை முன்னாள் தமிழ்நாடு வீரர் அபினவ் முகுந்த் படைந்துள்ளார். ஐபிஎல் அறிமுகமான 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபினவ் முகுந்த் தனது 18 வயது 139 நாட்களில் அறிமுகமானார்.

அங்கித் ராஜ்புத்:

வேகப்பந்து வீச்சாளர் அங்கித் ராஜ்புத் தனது முதல் போட்டியை 19 வயது 123 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். அங்கித் ராஜ்புத் கடந்த 2013ம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கினார். அதன்பிறகு, அங்கித் ராஜ்புத் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்பட சில அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு அங்கித் ராஜ்புத்துக்கு சென்னை அணி நிர்வாகம் ரூ. 10 லட்சம் சம்பளம் வழங்கியது.

மதிஷா பதிரனா:

இலங்கை நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மதிஷா பதிரனாவை சென்னை தத்தெடுத்தது என்றே சொல்லலாம். இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மதிஷா பதிரனா இருந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு 19 வயது 148 நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியை விளையாடினார்.

நூர் அகமது:

ஐபிஎல் 2025 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது விளையாடி வருகிறார். அந்தவகையில், நூர் அகமது பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் 20 வயது 79 நாட்களில் களமிறங்கினார்.