Rohit Sharma Net Worth 2025: கோடான கோடி ரசிகர்கள் அன்பு மழை.. கோடியில் புரளும் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Rohit Sharma's 38th Birthday: ரோஹித் சர்மா தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான அவரது சொத்து மதிப்பு ரூ. 214 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல், பிசிசிஐ ஒப்பந்தம் மற்றும் விளம்பரங்களில் இருந்து பெறும் தொகை இதில் அடங்கும். அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பங்களிப்புகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Rohit Sharma Net Worth 2025: கோடான கோடி ரசிகர்கள் அன்பு மழை.. கோடியில் புரளும் ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

ரோஹித் சர்மா

Published: 

30 Apr 2025 18:48 PM

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) இன்று அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது, ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மாவிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்தினரை சேர்ந்தவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மா இதுவரை 9 போட்டிகளில் 240 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவராக கருதப்படுகிறார். இந்தநிலையில், ரோஹித் சர்மாவின் நெட் வொர்த் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ரோஹித் சர்மாவின் சொத்து மதிப்பு:

ரோஹித் சர்மாவின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 214 கோடி என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்காக ரோஹித் சர்மா போட்டி கட்டணம் பெறுவது மட்டுமின்றி, ஐபிஎல் மற்றும் விளம்பரஙக்ள் மூலமும் கோடிக்கணக்கான ரூபாயை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ள மத்திய ஒப்பந்தத்தில் ரோஹித் சர்மா ஏ பிளஸ் கிரேடில் இடம் பெற்றுள்ளார். இதனால், ரோஹித் சர்மாவிற்கு ஆண்டுக்கு பிசிசிஐயிடமிருந்து ரூ. 7 கோடி சம்பளமாக கிடைக்கும்.

இதுதவிர, ரோஹித் சர்மா போட்டி கட்டணமாக ஒரு டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு ரூ. 15 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டி விளையாடுவதற்கு ரூ. 6 லட்ச ரூபாய் பெறுகிறார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை ரோஹித் சர்மா ஒரு டி20 போட்டியில் விளையாட ரூ. 2 லட்சம் சம்பளமாக வாங்கினார்.

மும்பை இந்தியன்ஸ்:

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, அந்த அணிக்காக இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். தற்போதும், ரோஹித் சர்மா ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு ஆண்டுதோறும் ரூ.16.30 கோடி சம்பளமாக வழங்குகிறது. அதன்படி, ரோஹித் சர்மா இதுவரை ஐபிஎல் மூலம் மட்டும் ரூ. 178 கோடி சம்பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

ரோஹித் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போது, அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன் பிறகு, அவர் செப்டம்பர் 2007 ம் ஆண்டு சர்வதேச டி20யில் அறிமுகமானார். இன்று ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரை 67 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 4301 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 273 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், 32 சதங்கள் உட்பட 11168 ரன்கள் எடுத்துள்ளார். 159 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் எடுத்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை 2024 பட்டத்தை வென்ற பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றது. இதன்பிறகு, ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.