IPL 2025: அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்… விரைவில் முடிக்க பிசிசிஐ திட்டம்..?

IPL 2025 Resumes Next Week: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட IPL 2025, அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. BCCI, மீதமுள்ள போட்டிகளின் அட்டவணையை விரைவில் வெளியிடும். டெல்லி-பஞ்சாப் போட்டியின் நிலை குறித்து இன்னும் தெளிவு இல்லை. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையும் கருத்தில் கொண்டு, IPL 2025 ஐ விரைவில் முடிக்க BCCI திட்டமிடுகிறது.

IPL 2025: அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... விரைவில் முடிக்க பிசிசிஐ திட்டம்..?

தரம்சாலா கிரிக்கெட் ஸ்டேடியம்

Published: 

10 May 2025 19:31 PM

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (India – Pakistan Tensions) இடையிலான தாக்குதல் நடவடிக்கைக்கு பிறகு, இப்போது மீண்டும் ஐபிஎல் 2025 (IPL 2025) தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அடுத்த வாரம் முதல் ஐபிஎல் 2025 சீசனில் மீதமுள்ள போட்டிகளை விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த போட்டி அட்டவணை விரைவில் பிசிசிஐ (BCCI) வெளியிடலாம். கடந்த 2025 மே 8ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஐபிஎல் 2025 சீசன்:

2025 மே 8ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 2025 மே 9ம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு மிகப்பெரிய அப்டேட்டை வெளியிட்டது.ல் அதில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஐபிஎல் ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தப்படுவதாக கூறியது. இதுப்போன்ற சூழ்நிலையில், அடுத்த வாரம் முதல் ஐபிஎல் 2025ன் மீதமுள்ள போட்டிகளை விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐபிஎல் 2025 சீசனில் இறுதிப்போட்டி உள்பட இன்னும் 12 லீக் போட்டிகளும், 4 பிளே ஆஃப் போட்டிகளும் மீதமுள்ளன.

விரைவில் ஐபிஎல் 2025 சீசனை முடிக்க திட்டம்:

இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. எனவே, இந்த சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு, ஐபிஎல் 2025 சீசனை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினால், அது ஒரு சில நகரங்களில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளது. கிடைத்த தகவலின்படி, வீரர்களின் பயணத்தை குறைக்க 3 அல்லது 4 நகரங்களில் நடத்தப்படலாம். மேலும், ஒரே நாளில் 2 போட்டிகள் வைப்பதன்மூலம், இந்த போட்டியை எப்படியாவது மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடும்.

டெல்லி – பஞ்சாப் போட்டி தொடர்ந்து நடைபெறுமா..?

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மீண்டும் விட்ட ஓவர்களில் இருந்து விளையாடலாம். அந்த போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் எந்த புள்ளிகளும் இரு அணிகளுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, இந்தப் போட்டி மீண்டும் டெல்லிக்கும் பஞ்சாப்புக்கும் இடையில் நடைபெறலாம். அப்படி இல்லையென்றால், வேறு ஒரு ஸ்டேடியத்தில் நடத்தலாம். ஆனால் இது குறித்து பிசிசிஐ தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.