IPL 2025: முதலிடத்திற்காக மோதும் குஜராத்.. வெற்றியுடன் கரை சேருமா சென்னை..? வானிலை எப்படி?

Chennai Super Kings vs Gujarat Titans: ஐபிஎல் 2025 இன் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தோனியின் கடைசி லீக் போட்டியாக இருக்கும் இதில், CSK கௌரவத்திற்காகவும், GT புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறவும் போராடும். இரு அணிகளின் பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட், வானிலை முன்னறிவிப்பு போன்றவை இந்த ஆர்டிகிளில் விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

IPL 2025: முதலிடத்திற்காக மோதும் குஜராத்.. வெற்றியுடன் கரை சேருமா சென்னை..? வானிலை எப்படி?

எம்.எஸ்.தோனி Vs சுப்மன் கில்

Published: 

25 May 2025 08:00 AM

ஐபிஎல் 2025ல் (IPL 2025) எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. ஐபிஎல் 2025ன் 67வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 25ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க முயற்சிக்கும். அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கௌரவத்திற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்த போராடும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், குஜராத் அணி முதல் 2 இடங்களில் நீடிக்க கடைசி போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். சென்னை அணி குஜராத்தை தோற்கடித்தால், பிளேஆஃப்களில் முதலிடத்தை எட்டும் சுப்மன் கில்லின் கனவு தகர்ந்து போகலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி அதிகபட்சமாக 4 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், குஜராத் 2 போட்டிகளிலும், சென்னை 1 போட்டியிலும் வென்றுள்ளது.

வானிலை எப்படி..?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியின் போது வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை. அதன்படி, வெப்பநிலை 40 டிகிரியும், ஈரப்பதம் 30 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாத்தியா, ரஷீத் கான், காகிசோ ரபாடா, அர்ஷத் கான், ஆர் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டெவோன் கான்வே, ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, நூர் அகமது, மத்திஷா பத்திரனா, கலீல் அகமது.