Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வீட்டில் நிம்மதியே இல்லையா? .. வாஸ்து சொல்லும் தீர்வு தான் என்ன?

ஜோதிட ரீதியாக பார்க்கும்போது வாஸ்து சாஸ்திரங்கள் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அப்படியான நிலையில் நம் வாழ்க்கையில் நம் வசிக்கும் வீட்டில் அமைதியான சூழல் நிலவ என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றி காணலாம்.

Vastu Tips: வீட்டில் நிம்மதியே இல்லையா? .. வாஸ்து சொல்லும் தீர்வு தான் என்ன?
வாஸ்து டிப்ஸ் Image Source: Pexels
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 21 Mar 2025 09:30 AM

பொதுவாக ஜோதிட சாஸ்திரங்கள் (Astrology) மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கிரகங்களின் அடிப்படையில் எப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகிறது என நம்பப்படுகிறது அதே அளவுக்கு வாஸ்து (Vastu Tips) விஷயங்களால் நம்முடைய இல்லங்களில் ஒவ்வொரு நல்லது மற்றும் கெட்டது ஆகியவை நடக்கிறது என சாஸ்திரங்கள் சொல்கிறது. இன்றைய நவீன உலகத்தில் பலரும் ஓய்வெடுக்க கூட நேரமில்லாமல் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்துவிட்ட நிலையில் மனிதர்களுடனான தொடர்பானது குறைந்து முழுக்க அமைதியின்மையும் மன அழுத்தமும் உறவுகளிடையே அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் நம் வீட்டில் சில நேரங்களில் ஏற்படும் வாஸ்து சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இதனை சில வழிகளில் நம்மால் குறைக்க முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

காரணம் அறிவியல் ரீதியாக நம்முடைய சுற்றுப்புறச் சூழல் நம்முடைய மன நிறை, குறையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் நாம் வசிக்கும் வீட்டின் சுத்தம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு வீடு சிறியதோ பெரியதோ எதுவாக இருந்தாலும் அது சுத்தமானதாக இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள் நிறைந்த இடமாக இருக்கக் கூடாது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது.

சூரிய ஒளியில் நேர்மறை ஆற்றல்

இதேபோல் பலரும் வீட்டினுள் இயற்கையின் ஒளியான சூரிய வெளிச்சம் கிடைக்காமல் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். இது தவறானது. சூரிய ஒளி வீட்டினுள் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அதேபோல் வீட்டைச் சுற்றிலும் தாவரங்கள் மற்றும் பூச்செடிகள் வைப்பது நம் மனதில் பாசிட்டிவான எண்ணங்களை உருவாக்கும். பொதுவாக பசுமை என்பது மங்களகரமான ஒன்றாக கருதப்படும் நிலையில் வீட்டில் நெகட்டிவ் எண்ணங்களை வெளியேற்றும் சக்தி தாவரங்களுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது

இதே போல் பஞ்சபூதங்களை கொண்டதாக கருதப்படும் தனிமங்களை வீட்டில் வைப்பதன் மூலம் சமச்சீரான சூழலை உருவாக்க முடியும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அவற்றை வைத்து பாசிட்டிவான எண்ணங்களை பெறுங்கள்.

வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்த தியானம் செய்வதற்கும் பிரார்த்தனை மேற்கொள்வதற்கும் இடத்தை தனியாக அமைக்கவும். அது வீட்டினுள் இருக்கும் ஏதேனும் ஒரு மூலை அல்லது வெளிப்புற இடமாக கூட இருக்கலாம். அந்த இடத்தின் அமைதி உங்கள் ஆழ் மனதில் பல்வேறு விதமான மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் ஜாதக நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

ரயில் பயணிகளே கவனியுங்கள்... திருச்சி ரெயில் சேவைகளில் மாற்றம்...
ரயில் பயணிகளே கவனியுங்கள்... திருச்சி ரெயில் சேவைகளில் மாற்றம்......
சுப்மன் கில் கோபம்.. நடுவருடன் அடுத்தடுத்த வாக்குவாதம்..
சுப்மன் கில் கோபம்.. நடுவருடன் அடுத்தடுத்த வாக்குவாதம்.....
மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் சஸ்பெண்ட்!
மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் சஸ்பெண்ட்!...
காக்க காக்க படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க யார் காரணம் தெரியுமா?
காக்க காக்க படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க யார் காரணம் தெரியுமா?...
என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. நடிகர் சந்தானம்!
என்னோட உண்மையான நண்பன் அவர்தான்.. நடிகர் சந்தானம்!...
சித்திரைத் திருவிழா... பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு
சித்திரைத் திருவிழா... பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு...
கோயிலில் கூட்ட நெரிசல்... 7 பேர் உயிரிழந்த சோகம்!
கோயிலில் கூட்ட நெரிசல்... 7 பேர் உயிரிழந்த சோகம்!...
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை... இதை செய்ய முதல்வர் உத்தரவு...
போருக்கு ரெடியான இந்தியா... போர் விமானங்களை இறக்கி சோதனை
போருக்கு ரெடியான இந்தியா... போர் விமானங்களை இறக்கி சோதனை...
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நடக்கும் பாராட்டு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நடக்கும் பாராட்டு விழா...
லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்..
லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்.....