Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நரசிம்ம ஜெயந்தி எப்போது? – இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

திருமாலின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் அவதரித்த நாளே நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நரசிம்மரை வழிபடுவதன் முக்கியத்துவம், விரதம் இருக்கும் முறை, பூஜை செய்யும் விதம், மற்றும் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் ஆகியவை பற்றி நாம் காணலாம்.

நரசிம்ம ஜெயந்தி எப்போது? – இப்படி வழிபட்டால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?
நரசிம்ம ஜெயந்தி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 May 2025 11:02 AM

பொதுவாக திருமால் பகைவர்களை அழிக்கும் பொருட்டு தசாவதாரங்கள் எடுத்தார் என்பது ஆன்மிக வரலாற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய முக்கியமான பகுதியாகும். இந்த 10 அவதாரங்களில் 4வது அவதாரமாக தோற்றியது தான் நரசிம்மர் (Lord Narasimha) . மனித உடல் மற்றும் சிங்கத்தின் தலை கொண்டு காட்சி தரும் நரசிம்மரை பலரும் உக்கிரமான தெய்வம் என நினைக்கின்றனர். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தாயுள்ளதோடு கருணையும், அன்பையும் பொழியும் வல்லமை கொண்டவர். அதேசமயம் தன்னை எதிர்ப்பவர்களுக்கு ரொம்ப உக்கிரமானவர். 16 கைகளுடன் இருக்கும் நரசிம்மர் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு ஆயுதத்தை வைத்திருப்பதை புகைப்படத்தில் நாம் கண்டிருக்கலாம். இரணியனை கொல்ல இந்த அவதாரம் எடுத்த நரசிம்மர் அவனது மகன் பிரகலாதன் அழைத்ததின் பேரில் தூணில் இருந்து வெளிப்பட்டு காட்சி கொடுத்த நாள் தான் நரசிம்ம ஜெயந்தியாக (Narasimha Jayanti) கொண்டாடப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு நரசிம்ம ஜெயந்தி திருவிழா மே 11 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அவர் சித்திரை – வைகாசி இடையில் வரும் அமாவாசை கழிந்த வளர்பிறை சதுர்த்தசியில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நரசிம்ம ஜெயந்தியன்று நாம் மேற்கொள்ள வேண்டிய விரதம் வழிமுறைகள் பற்றி காணலாம்.

விரதம் இருப்பது எப்படி?

பொதுவாகவே நரசிம்மரை வணங்கி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நாம் நினைத்த காரியம் விரைந்து கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலகி எதிரி பயம் நீங்கும். கடன் பிரச்சனைகள் குறையும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும் எனவும் சொல்லப்படுகிறது.

நரசிம்ம ஜெயந்தி அன்று காலையில் எழுந்து முதலில் புனித நீராட வேண்டும். பின்னர் புத்தாடை உடுத்தி நெற்றியில் நாமம் திலகமிட்டு பூஜை வழிபாட்டில் ஈடுபடலாம். ஒரு டேபிள் அல்லது மனையில் லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து அதனை செவ்வரளி மலர்கள் மற்றும் துளசியால் அலங்கரிக்க வேண்டும். ஏதேனும் பானகம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து நரசிம்ம மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யலாம்.

உச்சரிக்க வேண்டிய மந்திரம்

அதாவது, “நரசிம்மரே எனக்குத் தாய், நரசிம்மரே எனக்குத் தந்தை, நரசிம்மரே எனது குரு, நரசிம்மரே இறைவன். அவர்தான் எனக்கு எல்லாமமாக இருக்கிறார்” என 12 முறை சொல்லிவிட்டு புகைப்படத்தின் முன் விழுந்து வணங்கினால் நல்லது நடக்கும் என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தீப மற்றும் தூபங்கள் காட்டி சுவாமிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை வீட்டில் உள்ள குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும். பிரசாதம் சாப்பிடுவதற்கு முன்னர் சுவாமியின் உருவப்படத்தின் முன் தான் எந்த நோக்கத்திற்காக விரதம் இருந்தேன் என்பதை ரகசியமாக வெளிப்படுத்த வேண்டும்.

பிரதோஷம் என்பது சிவனுக்குரிய நாளாக மட்டுமல்லாமல் அது நரசிம்மருக்குரிய நாளாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் இந்த நரசிம்ம ஜெயந்தி பூஜை நல்ல நேரத்தில் மட்டும் செய்யலாம் என்பது கிடையாது. அன்றைய நாளில் பிரதோஷ காலத்தில் கூட வழிபடலாம். மேலும் நரசிம்மருக்கு விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அல்லது திரவ உணவு மட்டுமே உட்கொண்டு மேற்கொள்ளலாம்.

விரதம் மற்றும் வீட்டில் இறைவழிபாடு முடிந்தவுடன் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று நரசிம்மரை வணங்க வேண்டும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் நம்மை விட்டு விலகி நீண்ட ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடன் வாழ்வோம் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தகவல்களின் உண்மைகளுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?...
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!...
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்...