வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? – இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!

சாணக்கிய நீதிப்படி, இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் நான்கு விஷயங்களைச் செய்வதன் மூலம் வெற்றியையும் செல்வத்தையும் அடையலாம் என சொல்லப்பட்டுள்ளது. அறிவை வளர்த்தல், அடுத்த நாளுக்கான திட்டமிடல், இலக்குகள் பற்றிய சிந்தனை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவை அந்த நான்கு விஷயங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!

சாணக்ய நீதி

Published: 

24 May 2025 16:21 PM

வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரியாக அமையாது. இன்பம், துன்பம் என மாறி மாறி வரும் வாழ்க்கையில் எல்லோரும் வெற்றிபெறவே விரும்புகிறார்கள். ஆனால் அத்தகைய இலக்கை நீங்கள் அடைய விரும்பினால் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை மறக்க கூடாது. அதேசமயம் சில நேரங்களில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் விரும்பிய பலன்களைப் பெறாமல் ஏமாற்றமடையலாம். ஆனால் ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நீதியில், யார் ஒருவர் வாழ்க்கையில் எதையும் செய்ய விரும்பினாலும் சரியான திட்டமிடல் அவசியம் என தெரிவித்துள்ளார். மேலும் அணுகுமுறையில் வெற்றி பெறுவதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் நாம் எளிதாக வெற்றியையும் செல்வத்தையும் அடையலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

அதற்கு முன்பாக, ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், உங்களுடைய இன்றைய நாள் எப்படி சென்றது என்பதைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அதில், நீங்கள் என்ன தவறுகளைச் செய்தீர்கள், அவற்றிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள், அடுத்து வரும் நாட்களை அழகாக்க இன்னும் என்ன செய்ய முடியும்? என்பது பற்றி திட்டமிடுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்கக்கூடாத  4 விஷயங்கள்

  1. அறிவை அதிகரித்தல்:  தூங்குவதற்கு முன்பாக சிறிது நேரம் புத்தகங்களைப் படியுங்கள். ஒரு நல்ல புத்தகத்தை அரை மணி நேரம் அல்லது குறைந்தது இருபது நிமிடங்கள் படியுங்கள். புத்தகம் என்பது உங்கள் அறிவை அதிகரிக்கும் கருவிகளில் ஒன்றாகும். அறிவுதான் மிகப்பெரிய செல்வம் என  ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெற்றி அடைந்து பணக்காரர் ஆக விரும்பினால் உங்கள் அறிவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
  2.  அடுத்த நாளுக்கான திட்டம்: உங்களின் அடுத்த நாளை சிறப்பாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் உழைக்கவும் முன்கூட்டியே சரியான திட்டமிடல் அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. எனவே தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன், அடுத்த நாளை எப்படிக் கழிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்து உங்கள் மனதில் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.  குறிப்பாக காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யுங்கள். இந்த வழியில் செயல்பட்டால் அடுத்த நாள் மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்கள் இலக்குகளை சரியான நேரத்தில் அடைய முடியும்.
  3.  இலக்கு பற்றிய சிந்தனை:  ஒருவரின் மனம் எப்போதும் அவரது இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். காரணம் தெளிவான இலக்கை முன் வைத்திருப்பவர் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் ஒருபோதும் வழிதவற மாட்டார். அவர் நிச்சயமாக வெற்றியை நோக்கி அடியெடுத்து வைப்பார். எனவே இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்  மக்கள் தங்கள் இலக்குகளைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் இலக்கை அடையும்போது நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று சிந்தியுங்கள். இந்த விஷயங்கள் உங்களை கடினமாக உழைக்கவும், வெற்றிக்காக உங்கள் மூளை, மனதை உற்சாகப்படுத்தவும் ஊக்குவிக்கும்.
  4. நேர்மறையான சிந்தனை: இரவில் தூங்கும்போது தவறுதலாக கூட எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்காதீர்கள். இரவில் எதிர்மறையான எதையும் நீங்கள் நினைத்தால், அவை மேலும் எதிர்மறையாக மாறத் தொடங்கும். அதனா; படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஏதாவது நேர்மறையான விஷயத்தைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் காரணமானவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். இதைச் செய்வது உங்களுக்கு நன்றாகத் தூங்க உதவும்.

(ஆச்சார்ய சாணக்கியரின் சாணக்ய நீதியில் இருந்து இந்த கருத்துகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ்  பொறுப்பேற்காது)