ஸ்ரீ ராம நவமி 2026.. மார்ச் 26ஆ அல்லது மார்ச் 27ஆ?.. குழப்பத்தைத் தீர்க்கும் நேர விவரங்கள்! | TV9 Tamil News

ஸ்ரீ ராம நவமி 2026.. மார்ச் 26ஆ அல்லது மார்ச் 27ஆ?.. குழப்பத்தைத் தீர்க்கும் நேர விவரங்கள்!

Updated On: 

10 Mar 2026 14:27 PM

 IST

Rama Navami 2026: ஸ்ரீ ராம நவமி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது தர்மத்தின் பாதையில் நடக்க நமக்குப் போதிக்கும் ஒரு நன்னாளாகும். 2026-ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமியை முறைப்படி வழிபட்டு, ராமரின் அருளையும், அனுமனின் பலத்தையும் பெற்று வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோமாக.

1 / 5இந்துக்களின் போற்றுதலுக்குரிய தெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த தினமே 'ஸ்ரீ ராம நவமி' என உலகெங்கும் உள்ள பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி, எப்போது கொண்டாடப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு பகவான் எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம். இந்து நாட்காட்டியின்படி, பங்குனி மாதத்தில் வரும் நவமி திதியன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் போற்றுதலுக்குரிய தெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த தினமே 'ஸ்ரீ ராம நவமி' என உலகெங்கும் உள்ள பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி, எப்போது கொண்டாடப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தீய சக்திகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு பகவான் எடுத்த ஏழாவது அவதாரமே ராம அவதாரம். இந்து நாட்காட்டியின்படி, பங்குனி மாதத்தில் வரும் நவமி திதியன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.

2 / 5

தேதி குழப்பம் மற்றும் தெளிவு: 2026ம் ஆண்டில், நவமி திதி மார்ச் 26ம் தேதி பிற்பகலில் தொடங்கி, மார்ச் 27ம் தேதி நண்பகல் வரை நீடிக்கிறது. பொதுவாக, சூரிய உதயத்தின் போது நவமி திதி இருக்கும் நாளையே ராம நவமியாகக் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், மார்ச் 27, 2026, வெள்ளிக்கிழமை அன்று ராம நவமி கொண்டாடப்பட வேண்டும் என்று பஞ்சாங்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

3 / 5

பூஜை செய்ய வேண்டிய உகந்த நேரம்: ஸ்ரீ ராம நவமி அன்று ராமரை வழிபடச் சிறந்த நேரம் மதிய வேளையாகக் கருதப்படுகிறது. ராம நவமி பூஜை நேரம் (Madhyahna Muhurat): மார்ச் 27, 2026 காலை 11.06 மணி முதல் மதியம் 1.31 மணி வரை. இந்த இரண்டு மணிநேர இடைவெளி, ராமபிரானை வழிபடுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த நேரமாகக் கருதப்படுகிறது.

4 / 5

நவமி திதி விவரங்கள்: மார்ச் 26, 2026, மதியம் 2.18 மணிக்கு நவமி திதி தொடங்குகிறது. தொடர்ந்து, மார்ச் 27, 2026, மதியம் 12.36 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. புராணங்களின்படி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அயோத்தியில் ரகு வம்சத்தின் தசரத சக்கரவர்த்திக்கும் கௌசல்யா தேவிக்கும் மகனாகப் பங்குனி மாதத்தில் நவமி திதியன்று அவதரித்தார். அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பஜனைகள் மற்றும் ரத ஊர்வலங்கள் நடைபெறும்.

5 / 5

பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து, ராமாயணம் பாராயணம் செய்து, ராம நாமத்தை ஜெபிப்பதன் மூலம் தீமைகள் விலகி, வாழ்வில் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும், ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகப் பானகம் மற்றும் நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

Follow Us