மாசி தேய்பிறை சஷ்டி.. செல்வம் பெருக வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு.. | TV9 Tamil News

மாசி தேய்பிறை சஷ்டி.. செல்வம் பெருக வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு..

Updated On: 

09 Mar 2026 14:13 PM

 IST

Masi Theipirai Sashti: 2026, மார்ச் 9-ம் தேதி, மாசி மாதத்தின் 25வது நாள் மற்றும் திங்கட்கிழமை ஆகும். திங்கட்கிழமை சிவபெருமானுக்கும் சந்திர பகவானுக்கும் உரிய நாள். மேலும், இது மாசி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை என்பதால் சிவ வழிபாடு மிகவும் விசேஷமானது.

1 / 5வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பவர்கள், கடன் தொல்லை, வீண் விரயச் செலவுகள் அல்லது தொழில் நஷ்டத்தால் அவதிப்படுபவர்கள், மாசி மாத தேய்பிறை சஷ்டியான இன்று (மார்ச் 9) ஒரு எளிய வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பெரும் மாற்றங்களைக் காணலாம் என்று ஆன்மீகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பவர்கள், கடன் தொல்லை, வீண் விரயச் செலவுகள் அல்லது தொழில் நஷ்டத்தால் அவதிப்படுபவர்கள், மாசி மாத தேய்பிறை சஷ்டியான இன்று (மார்ச் 9) ஒரு எளிய வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பெரும் மாற்றங்களைக் காணலாம் என்று ஆன்மீகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 / 5

2026, மார்ச் 9-ம் தேதி, மாசி மாதத்தின் 25வது நாள் மற்றும் திங்கட்கிழமை ஆகும். திங்கட்கிழமை சிவபெருமானுக்கும் சந்திர பகவானுக்கும் உரிய நாள். மேலும், இது மாசி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை என்பதால் சிவ வழிபாடு மிகவும் விசேஷமானது. கூடுதல் சிறப்பாக, அன்றைய தினம் தேய்பிறை சஷ்டி திதியும் அமைகிறது. சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாள்.

3 / 5

அன்றைய தேதியான '9' என்பது செவ்வாய் பகவானுக்கு உரிய எண்ணாகும். செவ்வாய் பகவானின் அதிபதி முருகப்பெருமான் என்பதால், இந்த நாள் நிலம் மற்றும் வீடு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், லாபகரமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

4 / 5

இந்த வழிபாட்டை வீட்டிலேயே எளிய முறையில் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். காலையில் வெறும் வயிற்றில் குளித்து முடித்துவிட்டுச் செய்வது அதிக பலன் தரும். முருகப்பெருமான் படத்திற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, செவ்வரளிப் பூக்களால் அலங்கரிக்கவும். ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பால் அல்லது வாழைப்பழத்தை நிவேதனமாக வைக்கலாம். கிழக்கு நோக்கி அமர்ந்து, கையில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக்கொண்டு, "ஓம் ஷம் சரவணபவ" என்ற ஒரு வரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.

5 / 5

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அந்தத் தண்ணீரில் நேர்மறை ஆற்றல் இறங்கும் என்றும், அந்த நீரை அருந்துவதன் மூலம் நம் உடலில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி, பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. கடன் தொல்லைகள் நீங்கும், தொழிலில் லாபம் பெருகும், வீடு அல்லது நிலம் விற்பனை தொடர்பான தடைகள் விலகும், குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். இந்த எளிய ஆன்மீகப் பயிற்சியை மேற்கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்று பொருளாதாரக் கஷ்டங்களிலிருந்து விடுபடலாம் என்று இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

Follow Us