Fitness Tips: 6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் – பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்

Simple Weight Loss Tips : சமீப காலமாக அதிக உடல் எடை பிரச்னை பலரையும் அச்சுறுத்தி வருகிறது. ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க, அதற்கு ஏற்ப பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.ஆறு மாதங்களில் உங்கள் உடல் எடையைக் குறைக்க எளிய வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Fitness Tips: 6 மாதங்களில் ஈஸியா எடை குறைக்கலாம் - பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்

மாதிரி புகைப்படம்

Published: 

16 May 2025 23:47 PM

சமீப காலமாக தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக பலரும் அதிக உடல் எடையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.  ஆனால் உடல் எடையைக் குறைக்க கடினமாக முயன்றும் அவை சிக்கலானதாகவே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆறு மாதங்களுக்குள் எடையைக் குறைக்கலாம். இதற்கு சிறப்பு உணவுமுறை அல்லது ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சிகள் எல்லாம் தேவையில்லை. ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவதுதான். ஆறு மாதங்களில் உங்கள் உடலை மாற்ற உதவும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

பின்னோக்கி நடங்கள்

தினமும் 10 நிமிடங்கள் பின்னோக்கி நடப்பது மூட்டுகளை வலுப்படுத்தி சமநிலையை மேம்படுத்தும். வழக்கமான நடைப் பயிற்சி போல இல்லாமல் பயணத்தைப் பின்னோக்கி நடப்பது தொடை எலும்புகள் மற்றும் கால் மூட்டை ஆரோக்கியமாக வைக்கிறது. குறிப்பாக இது முழங்கால் வலியையும் குறைக்கும்.

 எலுமிச்சை மற்றும் இஞ்சி

காலையில் சிறிது எலுமிச்சை மற்றும் இஞ்சியுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதற்கிடையில், இஞ்சி செரிமானத்திற்கு சிறந்தது. இதை தினமும் குடிப்பது உடலின் நீர் சத்தை அதிகரித்து கலோரிகளை கட்டுப்படுத்துகிறது.

 உடற்பயிற்சியின் போது உங்கள் மூக்கின் வழியாக சுவாசிக்கவும்

உடற்பயிற்சியின் போது அதிக மூச்சு வாங்கும் என்பதால் அனைவரும் வாய் வழியாக சுவாசிப்பர். ஆனால் அதற்கு பதிலாக போது மூக்கு வழியாக சுவாசிப்பது நல்லது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும். கார்டியோ போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யும்போது இதைப் பயிற்சி செய்வதும் சோர்வைக் குறைக்க உதவும்.

குளிர்ந்த நீரில் குளிக்கவும்

பொதுவாக, குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பதால் தசை வலி மற்றும் வீக்கம் குறையும். இந்தப் பழக்கம் மன ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது.

எழுந்து நில்லுங்கள்

இன்றைய வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் எப்போதும் உட்கார்ந்த நிலையில் வேலை செய்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து நிற்பதும் நல்லது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தசைகளை பலவீனப்படுத்தி, முதுகுவலிக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எழுந்து நிற்க வேண்டும்.

உணவுமுறை

சூரியன் மறைந்த பிறகு நமது உடல் உழைப்பு குறையும்.  அதற்கு முன் உங்கள் உணவில் 80% சாப்பிடுவது நல்லது. இது செரிமான சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு ஆற்றலையும் வழங்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் நல்லது. புரதங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் நிறைந்த உணவை உங்கள் உணவின் சேர்த்துக்கொள்ளுங்கள். செரிமான பிரச்னைகளைத் தவிர்க்க, மாலையில் லேசான உணவை மட்டுமே சாப்பிடுவதைப் பழக்கமாக்குங்கள்.

30 விநாடிகள் ஸ்ட்ரெச்சிங்

உடற்பயிற்சிக்குப் பிறகு குறைந்தது 30 வினாடிகள் ஸ்ட்ரெச்சிங் செய்வது காயத்தின் அபாயத்தைக் குறைத்து நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவும்.

நடைப்பயிற்சி

ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களாவது புல்வெளியில் வெறுங்காலுடன் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்கும். சூரிய ஒளியில் நடப்பது மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.