பாதுகாப்பு டூ வானிலை கண்காணிப்பு.. நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்… சிறப்பம்சங்கள் என்னென்ன?

ISRO PSLVC61 Satellite : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 101வது செயற்கைகோள் 2025 மே 18ஆம் தேதியான நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பிஎஸ்எல்விசி 61 செயற்கைகோள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வானிலையை கண்காணிக்கும் திறன் கொண்டுள்ளது. இதற்கான கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு டூ வானிலை கண்காணிப்பு.. நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

Isro Pslv C16 Satellite

Updated On: 

17 May 2025 09:46 AM

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி61 (PSLV C61 EOS 09) ராக்கெட் 2025 மே 18ஆம் தேதியான நாள் விண்ணல் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் சரியாக 2025 மே 18ஆம் தேதியான காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவை 100 செயற்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. பல்வேறு ஆராய்ச்சிக்கா செயற்கோள்களை அனுப்பி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, சந்திரயான் 3,  ஆதித்யா எல் -1 என பல சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது.   மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த முயற்சி வருகிறது.

நாளை பாயும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்

இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது  101வது செயற்கைகோளை 2025 மே 18ஆம் தேதியான நாளை ஏவுகிறது. இந்தியாவின் 101வது செயற்கைக்கோள் RISAT-18 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்எல்வி சி61 ராக்கெட் காலை 5.59 மணிக்கு ஏவப்பட உள்ளது.

இந்த ராக்கெட்டில் 1,710 கிலோ எடை கொண்ட இஓஎஸ் 09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் பூமியின் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட ள்ளது. மேலும், இந்த செயற்கைகோள் கண்காணிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

அதோடு, பரந்த நிலப்பரப்பில் நிகழ்நேர புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பெற முடியும். அத்துடன் அனைத்து வானிலை தரவுகளையும் விண்வெளியில் இருந்து உடனுக்குடன் அனுப்பும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை இந்த செயற்கை உறுதிப்படுத்தும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த செயற்கைக்கோள் முக்கியமான எல்லைகள் மற்றும் கடற்கரையோரங்களின் கண்காணிப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த செயற்கை இரவு, பகல், மோசமான வானிலையில் கூட , புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.  மேலும், பேரிடர் மேலாண், விவசாய கண்காப்பு ஆகிய பணிகளுக்கு இது பெரிதும் உதவும். இந்த செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.