India vs Pakistan Live Updates : பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த இந்தியா!
India vs Pakistan War Tension : ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக ஜம்முகாஷ்மீர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது

இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்
LIVE NEWS & UPDATES
-
மறக்க முடியாத வகையில் இந்தியா பதிலடி.. வீரேந்தர் சேவாக் பாராட்டு
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், “பாகிஸ்தான் அமைதியாக இருக்க வாய்ப்பு கிடைத்தபோதும், அவர்கள் போரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் பயங்கரவாத சொத்துக்களைக் காப்பாற்ற தீவிரமடைந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு நமது படைகள் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் மிகவும் பொருத்தமான முறையில் பதிலடி கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
-
பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன!
எல்லையில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் கால்வரையின்றி மூடப்பட்டுள்ளன. இதேபோல போர் பதற்றம் நீடிப்பதால் பஞ்சாப்பிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
-
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அவசரநிலை பிரகடனம்
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே தாக்குதல்?
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல்?
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பலூச் விடுதலைப் படை (Baloch Liberation Army) தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற தாக்குதல்களை பாக் ராணுவம் அடிக்கடி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் பலமுறை பலூச் விடுதலைப் படை பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ஐஎஸ்ஐ அலுவலகம் மீது தாக்குதல்
லாகூரில் உள்ள ஐ.எஸ்.ஐ தலைமையகத்தின் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
காலை 10 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு
பாகிஸ்தான் மீது இந்திய தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில்வெளியுறவு அமைச்சகமும் மே 9, 2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கராச்சியில் துருக்கி சரக்கு விமானம்
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் துருக்கிய சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்த சரக்கு விமானத்தில் துருக்கிய ட்ரோன்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மே 8, 2025 நண்பகல் 12 மணியளவில் ஒரு துருக்கிய சரக்கு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிகிறது.
-
வெளிநாட்டு தலைவர்களுக்கு விளக்கமளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்
பாகிஸ்தானுடனான தாக்குதல் சம்பம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர் விளக்கமளித்தார்.
-
பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள்
பாகிஸ்தானைச் சேர்ந்த லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், கோட்லி ஆகிய பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இம்ரான் கானை வெளியே கொண்டு வர முயற்சி..!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை பயன்படுத்தி சிறையில் உள்ள இம்ரான்கானை வெளியே கொண்டு வர அவரது ஆதரவாளர்கள் முயற்சி
-
இந்தியா தக்க பதிலடி
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாகூர், இஸ்லாமாபாத், பஹவல்பூர் மற்றும் சியால்கோட்டுக்குப் பிறகு, இப்போது பெஷாவரில் இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
கராச்சி துறைமுகத்தை தாக்கிய இந்திய இராணுவம்..!
இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து கராச்சி துறைமுகத்தை அழித்துள்ளது. 1971க்கு பிறகு இந்திய ராணுவம் கராச்சி துறைமுகத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் மீது முப்படை தாக்குதல்..!
பாகிஸ்தான் மீது இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்..!
இந்திய எல்லையில் உள்ள உரி பகுதியில் பொதுமக்களின் வீடுகளில் பாகிஸ்தான் ராணுவம் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
-
ஒவ்வொரு செயலுக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்: எஸ் ஜெய்சங்கர்
பாகிஸ்தான் தனது அழிவுக்கான தேதியை நிர்ணயித்துள்ளது. அவர்கள் இன்று செய்த 2வது தவறுதலுக்காக நினைத்துக்கூடப் பார்க்காத தண்டனையைப் பெறப் போகிறார்கள். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
-
பஞ்சாபில் அனைத்து கல்வி நிலையங்களும் 3 நாட்களுக்கு மூட உத்தரவு
பஞ்சாபில் அனைத்து கல்வி நிலையங்களும் 3 நாட்களுக்கு மூட உத்தரவு. முன்னேச்சரிக்கை நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்
-
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இந்திய ராணுவம் எதிர் தாக்குதல்
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இந்திய ராணுவம் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், கராச்சி பகுதிகளிலும் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவசர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அவசர கால ஏற்பாடாக நடவடிக்கை
-
முன்னெச்சரிக்கையாக மின் தடை
இன்று அதாவது 2025 மே 8ம் தேதி இரவு 8.45 மணிக்கு ஜம்முவை ஏவுகணை மூலம் தாக்க பாகிஸ்தான் மீண்டும் முயற்சி செய்தது. இதன்பின்னர், ஜம்முவிலிருந்து பஞ்சாப், ராஜஸ்தான் வரை மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்சால்மரில் பாகிஸ்தானில் ட்ரோனை இந்திய வான் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியாக ஏ.என்.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
-
பாதுகாப்பான இடங்களில் இந்தியர்கள்
பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் எல்லையில் முன்கள ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஜம்மு பகுதியில் குண்டு வெடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதல்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலை இந்தியா தடுத்து நிறுத்தியது.
மே 08, 2025 நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் அதனை முறியடித்து உள்ளது. அதாவது பாகிஸ்தானின் தாக்குதலை S-400 பாதுகாப்பு அமைப்பு முறியடித்துள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்பு பல்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் வெவ்வேறு உயரங்களில் தாக்கும் திறன் கொண்டது. அதிநவீன ரேடார் மற்றும் இடைமறித்து தாக்கும் தொழில்நுட்பங்களை கொண்டது என்பதால் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளது.